பதிவு செய்த நாள்
30 ஆக2013
01:35

புதுடில்லி:இறக்குமதி செய்யப்படும், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, ஆகஸ்ட் 26ம் தேதி நிலவரப்படி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 7,000ஆக அதிகரித்துள்ளது. இது, நடப்பாண்டு ஏப்ரல் மாதம், 5,500 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செலவு:டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின்சரிவு நிலை மற்றும் சர்வதேசசந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால், கடந்த ஐந்து மாதங்களில், இறக்குமதி செய்யப்படும், கச்சா எண்ணெயின் விலை, பீப்பாய்க்கு, 1,500 ரூபாய் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட், 26ம் தேதி வரையிலுமாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 19சதவீதத்திற்கும் அதிகமாகசரிவடைந்துள்ளது. இதே காலத்தில்,சர்வதேச சந்தையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 7சதவீதம் உயர்ந்துள்ளது.
நாட்டின் கச்சா எண்ணெய்க்கான தேவையில், 80சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய்க்கான இறக்குமதி செலவினம், பன்மடங்கு அதிகரித்துள்ளதையடுத்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதுடன், எண்ணெய்சந்தைப்படுத்தும், மூன்று பொதுத் துறை நிறுவனங்களுக்கு, அதிக அளவில் வருவாய் இழப்பும் ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை, 5,665 ரூபாய் என்ற அளவில் வாங்கிய நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 27,638 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 7,000 ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில், நடப்பு முழு நிதியாண்டில், இந்நிறுவனங்களுக்கு, 1.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
அடக்க விலைக்கும் குறைவாக, டீசல்,சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை விற்பதால் ஏற்படும், வருவாய் இழப்பை ஈடு செய்ய, நடப்பு, 2013 - 14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், 65 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வருவாய் இழப்பு:இதில்,கடந்த நிதியாண்டிற்கு வழங்க வேண்டிய, 18 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையும் அடங்கும்.இச்சூழ்நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு அதிகரிக்கும் என்பதுடன், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|