பதிவு செய்த நாள்
11 செப்2013
01:16

தங்கத்தில் முதலீடு செய்யக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் (கோல்டு இ.டி.எப்.,) இருந்து, சென்ற ஆகஸ்ட் மாதம், சாதனை அளவாக, நிகர அளவில், 588 கோடி ரூபாய்முதலீடு வெளியேறி உள்ளது.ரூபாய்மதிப்பு சரிவடைந்து, தங்கம் விலை திடீரென்று உயர்ந்ததால், லாப நோக்கம் கருதி, தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளனர்.
நிகர முதலீடு:நடப்பு ஆண்டில், கடந்த எட்டு மாதங்களில், ஆறு மாதங்களில், மேற்கண்ட திட்டங்களிலிருந்து, நிகர அளவில், அதிகளவு முதலீடு வெளியேறியுள்ளது. இதில், ஆகஸ்ட் மாதத்தில் தான் மிக அதிக அளவிலான முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.ஜனவரி மற்றும் மே மாதங்களில் மட்டும், இத்திட்டங்களில், முறையே 81 கோடி ரூபாய்மற்றும் 5 கோடி ரூபாய்முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில், 14 வகையான, தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. சென்ற ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 7.66 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், தங்க பரஸ்பர நிதி திட்டத்தின் பங்களிப்பு, ஒரு சதவீதம், அதாவது, 11,828 கோடி ரூபாய்என்ற அளவிற்கு உள்ளது.தங்கம் இறக்குமதியை கட்டுப் படுத்த, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால், தங்க பரஸ்பர நிதி திட்டங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.
தங்கம் மீதான சுங்க வரியை, 4 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக உயர்த்தியது, வங்கிகளின் தங்க நாணயங்கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கம் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது.ரூபாய் மதிப்பு:இதனால், தங்க பரஸ்பர நிதி திட்டங்களை நிர்வகிக்கும் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு, தங்கம் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், தங்கம் விலை :அதிகரித்ததும், ரூபாய்மதிப்பு வீழ்ச்சி கண்டதும், தங்க பரஸ்பர நிதி திட்டங்களின் மீதான முதலீடு களை குறைக்க வழி வகுத்தன.இதனால், சில நிறுவனங்கள், தாமாகவே முன் வந்து, தங்க பரஸ்பர நிதி திட்ட முதலீடுகளை நிறுத்தி வைத்துள்ளன.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|