பதிவு செய்த நாள்
16 செப்2013
18:21

சென்னை : வங்கி சாரா நிதி சேவையில் ஈடுபட்டு வரும், இந்தியா இன்போலைன் பைனான்ஸ் நிறுவனம் (ஐ.ஐ.எப்.எல்.,), கடன்பத்திர வெளியீடு மூலம், 1,050 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் கூறியதாவது: நிறுவனம், தங்கம் மற்றும் சொத்துகளை அடமானமாக பெற்று கடன் வழங்கி வருகிறது. மேலும், வர்த்தக வாகனம், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றிற்கும் கடன் வழங்குகிறது. நிறுவனத்தின் வ‹லாகாத கடன் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது. விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நிறுவனம், முதற்கட்டமாக, பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு, 525 கோடி ரூபாயை திரட்டி கொள்ள உள்ளது. கடன்பத்திரங்கள் வேண்டி அதிகம் விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், கூடுதலாக, 525 கோடி ரூபாய் திரட்டி கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் கால வரையறை கொண்ட, இக்கடன்பத்திரம் ஒன்றின் முகமதிப்பு, 1,000 ரூபாயாகும். குறைந்தபட்சம், 5 கடன்பத்திரங்களில், அதாவது, 5,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு, ஆண்டுக்கு, 12.68 சதவீதம் வட்டி வழங்கப்படும். மேலும், கேர் நிறுவனம், இக்கடன்பத்திர வெளியீட்டிற்கு, 'கேர் ஏஏ' தரக்குறியீட்டை வழங்கியுள்ளது.
இக்கடன்பத்திர வெளியீடு, இம்மாதம் 17ம் தேதி தொடங்கி, வரும் அக்டோபர் 4ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இக்கடன்பத்திரங்கள் பட்டியலிடப்பட உள்ளன. இவ்வாறு, வெங்கட்ராமன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|