பதிவு செய்த நாள்
18 செப்2013
00:19

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி., நிறுவனம், அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந் நிறுவனம், நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், 20,200 கோடி ரூபாய் செலவில், பல்வேறு விரிவாக்க திட்டங்களை மேற் கொள்ள இருப்பதாக, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அருப்ராய் சவுத்ரி தெரிவித்தார்.
மின் உற்பத்தி: கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளுக்காக, 19,926 கோடி ரூபாயை செலவிட்டு உள்ளது. அவ்வாண்டில், இந்நிறுவனம், கூடுதலாக, 4,170 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் வகையில், திட்டங்களை அமல்படுத்தின.
இதில், கூட்டுத் திட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட, 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திட்டமும் அடங்கும். தற்போது, இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன், 41,187 மெகா வாட் என்ற அளவில் உள்ளது.இந்நிறுவனம், சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைத்துள்ள சிப்பாட் அனல் மின் உற்பத்தி திட்டத்தை வரும் வியாழனன்று, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைக்க உள்ளார்.
2,980 மெகா வாட் திறன் கொண்ட, இந்த அனல் மின் உற்பத்தி பிரிவின் முதல் பகுதியில், தலா, 660 மெகா வாட் திறன் கொண்ட மூன்று அனல் மின் நிலையங்களும், இரண்டாவது பிரிவில், தலா, 500 மெகா வாட் திறனில், இரண்டு மின் நிலையங்களும் இடம் பெற்றுள்ளன.
பங்கு மூலதனம்:இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள இரு மின் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.கடந்த ஆண்டு, மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 9.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 11,400 கோடி ரூபாயை திரட்டி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|