பதிவு செய்த நாள்
18 செப்2013
00:22

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்று முன் தினம், ரூபாய் மதிப்பு, 65 காசுகள் உயர்ந்து, 62.85ல் நிலைபெற்றது. நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இறுதி யில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 52 காசுகள் குறைந்து, 63.37 ஆக வீழ்ச்சி கண்டது.
வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 63.33 ஆக சரிவுடன் காணப்பட்டது. இது, ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக, 62.99 வரையிலும், குறைந்தபட்சமாக, 63.64 வரையிலும் சென்றது.அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையாக, மாதந்தோறும் 8,500 கோடி டாலர் மதிப்புள்ள கடன்பத்திரங்களை வாங்கி வருகிறது.
தற்போது, அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் அறிகுறி தென்படுகிறது. இதனால், அமெரிக்க மத்திய வங்கி, மாதந்தோறும், 500-1,000 கோடி டாலர் அளவிற்கு, கடன்பத்திரங்கள் வாங்குவதை குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அறிவிப்பு, இன்றும், நாளையும் நடைபெறும் அமெரிக்க மத்திய வங்கி மேற்கொண்டு வரும், சந்தை குழு கூட்டத்தின் இறுதியில் வெளியாகும் என, தெரிகிறது.
இதன் காரணமாக,டாலருக்கான தேவை அதிகரித்து,இதர செலாவணிகளுக்கு எதிரான அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி, வர்த்தகத்தின் இடையே, 68.85ஆக சரிவடைந்தது. இதையடுத்து, அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை களால், கடந்த இரண்டு வாரங்களில், ரூபாய் மதிப்பு, 7.37 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|