பதிவு செய்த நாள்
26 செப்2013
22:34

இன்று இந்திய இளைஞர்களின் மனம் கவரும், கார் மாடல் என்றால், அது எஸ்.யு.வி., தான் என்று கூறும் அளவிற்கு, எல்லா வாகன உற்பத்தியாளர்களும், தங்களின் புது மாடல்களை கொண்டு வருகின்றனர். சாகச பயணங்களை ஆர்வத்துடன் மேற்கொள்ளும் இளைஞர்கள், குடும்ப உபயோகம் மற்றும் தொழில் ரீதியான பயணங்களுக்கு, வெகுவாக பொருந்தும் தோற்றம் மற்றும் அளவு, கரடு முரடான இந்திய சாலைகளுக்கு ஏற்றதாய் இருப்பது போன்றவை, இதற்கு காரணமாக இருக்கலாம். அந்த வகையில், இந்திய மக்களை சட்டென கவரும் முறையில், வந்துள்ள வாகனமே நிசானின் டெரேனோ. ரெனோவும், நிசானும் இணைந்து தங்களின் உற்பத்தி கூடத்தை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்த பின், நிசானின் மாடலை ரெனோவும், ரெனோவும்மாடலை நிசானும் தங்களின் பிரத்யேக முத்திரைகளுடன் கொண்டுவருகின்றனர். டெனோவின் டஸ்டரை தொடர்ந்து வந்துள்ள, டெரேனோ நிசானின் தனித்துவத்துடன் மிகவும் கம்பீரமாகவும், முரட்டுத்தனமாகவும் வெளிப்புறத்திலும், சொகுசாகவும், நளினமாகவும், உட்புறத்திலும் திகழ்கிறது.
ராஜஸ்தானின் உதயப்பூரில் கரடுமுரடான மேடு பள்ளங்கள் நிறைந்த, மலைபாதைகளில், நூற்றுக் கணக்கான கிலோமீட்டர் ஒட்டிப்பார்த்ததில் ஏகோபித்த பாராட்டுக்களையும், வாடிக்கையாளர் திருப்தியையும் டெரோனோ பெற்றுவிடும் என்றே தெரிகிறது.
தோற்றத்தில் டெரேனோ: தோற்றத்தில் பின்புற ஸ்பாஸ்லர், மேற்கூரையில் ரெய்லிங்ஸ் டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஸ்போர்டிபான ஹெட்லைட், பாங்கான டெயில் லைட்களுடன், சேர்ந்து, அதன் விளைவு நெளிவுகள் கொண்ட பானெட் மற்றும் பக்கங்கள் பார்ப்பவரை திரும்பி பார்க்க வைக்கிறது. பின்புற பூட்பானெட்டின் வடிவமைப்பு, சற்றே முரட்டுத் தனத்தை காட்டுவதும், எக்ஸ்ட்ரா வீல் (ஸ்டெப்னி) பின்புறம் பொருத்தப்படாமல் இருப்பதும், டெரேனோவின் அழகை கூடுதலாக்குகிறது.
உட்புற அழகில் டெரேனோ உள்ளத்தை கவரும் வகையில், ஆடம்பர தோற்றத்தையும், அமர்ந்து கொள்ள சொகுசாகவும், வசதியான இருக்கைகளுடன், சத்தமில்லாத கேபிள் பயணத்தை சுகமாக்கவே செய்கிறது. ட்யூவல் டோன் இன்டீரியர், தோலினால் மூடப்பட்ட ஸ்டியரிங் மற்றும் கியர் ஷிப்ட் ராப், அகலமான இன்ஸ்ட்ருமென்ட் பானல், லம்பார் சப்போர்ட் இருக்கை விசாலமான இடவசதி, 100 கி.மீ., வேகத்திலும், சத்தம் கேட்காத ரப்பர் கேசிங் செய்யப்பட்ட கேபின் போன்றவை, கண்களுக்கும் கருத்திற்கும் இசைவான அம்சங்களாகும்.
செயல்பாட்டில் டெரேனோ: இதன் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இரண்டு பவர்களுடன் வருகிறது முறையே, 85பிஎஸ் மற்றும் 110 பி.எஸ்., என்று 110பி.எஸ்., பவர் கொண்ட டீசல் இன்ஜின் 6 ஸ்பீட் மானுவல் கியர் பாக்சுடனும், 85 பி.எஸ்., பவர் கொண்டது. 5ஸ்பீட் மானுவல் கியர் பாக்சுடணும் வருகிறது. டெரோனோவில் பெட்ரோல் மாடலும் உண்டு. இதன் பெட்ரோல் இன்ஜின் 1.6 லிட்டர் கொண்ட 86பி.எஸ்., பவர் வழங்கக்கூடிய இன்ஜினாகும்.
நகரப் போக்குவரத்தில், க்ளட்சின் செயல்பாடு சற்றே கடினமாக, நின்று நின்று போகும்போது, தோன்றினாலும் நெடுஞ்சாலைப் பயணத்தில் இதன் செயல்பாடு அசத்துகிறது. குறிப்பாக, 2,500 முதல் 4,000 வரையிலான ஆஸ்பி எம்மில் சிறப்பான சக்தியையும், இழுப்பு விசையையும் வழங்குவதால், ஒரு வழிப்பாதையிலும் வாகனங்களை மாறிச் செய்வதில் சிரமமேயில்லை. சாலையில் வாகனத்தின் ஸ்திரத்தன்மை சிறப்பாக இருப்பதுடன், அதிகபட்ச வேகத்திலும், கரடு முரடான சாலை மற்றும் சரிவான மலைப்பாதைகளிலும் வண்டியை கட்டுப்படுத்துவது சுலபமாகவே இருக்கிறது.
சொகுசு மற்றும் பாதுகாப்பு: ஏ.வி.எஸ்., இ.பி.டி., மற்றும் ப்ரேக் அசிஸ்ட் கொண்ட ப்ரேக்கிங் சிஸ்டம், முன்புற பாக்லாம்ப், ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிகள் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன.
முன் மற்றும் பின்புற பவர் ஷிண்டோ 2 டின் ஆடியோ பின்புற "ஏசி' கன்ட்ரோல், லெதர் சீட்கள் மேல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே என்று முக்கிய சொகுசு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் உள்ளன.
வேரியன்ட்கள்: XE, XL, XL ப்ளஸ் என்ற மூன்று வேரியன்ட்கள் 1.5லி டீசல், 8.5 பி.எஸ்., பவர் மாடலில் உள்ளதாகவும், XL, XV,XV ப்ரீமியம் என்ற மூன்று வேரியன்டகள் 1.5லி டீசல், 110 பி.எஸ்., பவர் 6ஸ்பீட் மானுவல் ட்ரான்ஸ்மிஷன் மாடலில் உள்ளதாகவும், XL என்ற ஒரு வேரியன்ட் 1.6லி பெட்ரோல் 104 பி.எஸ்., பவர் கொண்ட மாடலிலும் வருகிறது.
மொத்தத்தில் நிசான் டெரேனோ: அசகாய செயல்பாட்டுடன், கம்பீரமான தோற்றத்தில் இருந்தாலும், அடக்கமாய் இருக்க வேண்டும் என, நினைப்பவர்க்கு ஏற்ற வடிவமைப்பில் வந்துள்ள, நிசான் டெரேனோ அனைவரின் மலைகளையும் கவரும் என்பது உறுதி.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|