ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ... காபி ஏற்றுமதியில் சரிவுஐரோப்பாவில் தேவை குறைந்தது காபி ஏற்றுமதியில் சரிவுஐரோப்பாவில் தேவை குறைந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
உள்நாட்டில் வாகனங்கள் விற்பனையில் ஏற்ற இறக்கம் :தீபாவளியை முன்னிட்டு சூடுபிடிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2013
00:21

புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை, ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்து, விற்பனையை உயர்த்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளன.
பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு, வாகன கடனுக்கான வட்டி அதிகமாக இருப்பது போன்ற பல்வேறு இடர் பாடுகளை வாகனத் துறை சந்தித்து வருகிறது.
மாருதி சுசூகி:இதனால், நடப்பாண்டு துவக்கம் முதல், வாகன துறையின் விற்பனை, எதிர்பார்த்ததை விட, குறைவாக உள்ளது. தொய்ந்திருந்த வாகன விற்பனையில், கடந்த ஆகஸ்ட் மாதம், சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. செப்டம்பரில், சில நிறுவனங்களின் வாகன விற்பனை உயர்ந்தும், சிலவற்றின் விற்பனை குறைந்தும் இருந்தது.
மாருதி நிறுவனம், கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. சென்ற செப்டம்பரில், இதன் கார் விற்பனை, 11.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,04,964 ஆக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 93,988 ஆக இருந்தது.
இதே காலத்தில், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகரித்து, 5,187 என்ற எண்ணிக்கையிலிருந்து, 14,565 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 1.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 88,801லிருந்து, 90,399ஆக உயர்ந்துள்ளது.
போர்டு இந்தியா:இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 51 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,418லிருந்து, 14,217ஆக அதிகரித்துள்ளது.உள்நாட்டில், கார் விற்பனை, 36.51 சதவீதம் அதிகரித்து, 7,794லிருந்து, 10,640ஆக உயர்ந்துள்ளது. கார் ஏற்றுமதி, இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 1,624லிருந்து, 3,577ஆக வளர்ச்சி கண்டுள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை, 88 சதவீதம் அதிகரித்து, 5,508லிருந்து, 10,354 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
மகிந்திரா:மதிப்பீட்டு காலத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 10.45 சதவீதம் வீழ்ச்சி கண்டு,48,342லிருந்து, 43,289ஆக சரிவடைந்துள்ளது. இதன் உள்நாட்டு வாகன விற்பனை, 10.35 சதவீதம் குறைந்து, 45,263லிருந்து, 40,574ஆக சரிவடைந்துள்ளது.
வாகனஏற்றுமதியும்,11.88 சதவீதம் சரிவடைந்து, 3,079 என்ற எண்ணிக்கையிலிருந்து, 2,715 ஆக குறைந்துள்ளது.இருப்பினும், இந்நிறுவனத்தின்3 சக்கர வாகனங்கள் விற்பனை, 5.86 சதவீதம் உயர்ந்து, 6,048லிருந்து, 6,403ஆக அதிகரித்துள்ளது.
கணக்கீட்டுகாலத்தில்,ஜெனரல் மோட்டார்ஸ்நிறுவனத்தின் கார்விற்பனை,4.79 சதவீதம் சரிவடைந்து, 7,403 என்ற எண்ணிக்கையிலிருந்து,7,048 ஆக குறைந்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார்:இந்நிறுவனம், வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், இதன் கார் விற்பனை, 3.99 சதவீதம் சரிவடைந்து, 51,418 ஆக குறைந்துள்ளது.இது, கடந்தாண்டு செப்டம்பரில், 53,557 ஆக இருந்தது.
இதே காலத்தில், இந்நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை, 30,851 லிருந்து, 30,601ஆக குறைந்துள்ளது.கார் ஏற்றுமதியும், 8.31 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 22,706 லிருந்து, 20,817ஆக சரிவடைந்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்:நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 15.78 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,04,787 என்ற எண்ணிக்கையிலிருந்து, 4,68,670ஆக அதிகரித்துள்ளது.
டி.வி.எஸ்., மோட்டார்:சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 1,97,409 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 1,70,097ஆக இருந்தது. ஆக, மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இருசக்கர வாகனங்கள் பிரிவில், இந்நிறுவனத்தின் விற்பனை, 15 சதவீதம் உயர்ந்து, 1,65,092 என்ற எண்ணிக்கையிலிருந்து, 1,89,609 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, உள்நாட்டில், இந்நிறுவனத்தின் வாகன விற்பனை, 13 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,49,191லிருந்து, 1,68,598ஆக உயர்ந்துள்ளது.இதே போன்று இந்நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்றுமதி, 47 சதவீதம் அதிகரித்து, 18,818 என்ற எண்ணிக்கையிலிருந்து, 27,577ஆக வளர்ச்சி கண்டு உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)