பதிவு செய்த நாள்
02 அக்2013
00:26
சென்ற 2012–13ம் பருவத்தில் (அக்., – செப்.,), நாட்டின் காபி ஏற்றுமதி, 5.34 சதவீதம் சரிவடைந்து, 2,99,266 டன்னாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய 2011–12ம் பருவத்தில், காபி ஏற்றுமதி, 3,16,164 டன்னாக அதிகரித்து காணப்பட்டது என, காபி வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தேவை குறைந்ததையடுத்து, மதிப்பீட்டு பருவத்தில், நாட்டின் ஒட்டு மொத்த காபி ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இதே பருவத்தில், காபி ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையிலும், 4.1 சதவீதம் குறைந்து, 4,725 கோடி ரூபாயிலிருந்து, 3,530 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
குறிப்பாக, அரபிகா வகை காபியின் விலை, 20–25 சதவீதம் வீழ்ச்சி கண்டதை அடுத்து, ஒட்டு மொத்த அளவில், மதிப்பின் அடிப்படையிலான இதன் ஏற்றுமதி குறைந்து போயுள்ளது.நடப்பு பருவத்தில், இந்தியாவின் காபி உற்பத்தி, 3.12 லட்சம் டன்னாக இருக்கும் என, காபி வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. அதேசமயம், நாட்டின் காபி உற்பத்தி, 70,000–2,90,000 டன் என்ற அளவிலேயே இருக்கும் என, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|