பதிவு செய்த நாள்
05 அக்2013
00:21
சென்னை:சில தினங்களாக குறைந்திருந்த, ஆபரண தங்கம் விலை, நேற்று திடீரென, சவரனுக்கு, 152 ரூபாய் உயர்ந்திருந்தது.
சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்ததை அடுத்து, உள்நாட்டில், இதன் விலை சரிவடைந்திருந்தது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,747 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,976 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 29,380 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 19 ரூபாய் உயர்ந்து, 2,766 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 152 ரூபாய் அதிகரித்து, 22,128 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 205 ரூபாய் உயர்ந்து, 29,585 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 51.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 48,020 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|