பதிவு செய்த நாள்
18 அக்2013
02:50

நாமக்கல் : தமிழக கறிக்கோழிகளுக்கு, கேரளாவில், "பிளாட் ரேட்" நிர்ணயிக்கப்பட்டதால், அங்கு கறிக்கோழி வரத்து குறைந்துள்ளது. இதனால், கேரள அரசுக்கு, இரண்டு விதத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விலை நிர்ணயம்:பல்லடம், தேசிய கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு, கறிக்கோழிக்கு வாரந்தோறும் விலை நிர்ணயம் செய்கிறது. அந்த விலைக்கு, வாரந்தோறும், 20 லட்சம் கிலோ கறிக்கோழிகள், கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கேரள அரசு, ஒரு கிலோ உயிருள்ள கோழியின் விலை, 95 ரூபாய் எனவும், ஒரு நாள் வயதுடைய கோழிக் குஞ்சின் விலை, 45 ரூபாய் எனவும், "பிளாட்ரேட்" நிர்ணயம் செய்தது.இதற்கு, 13.5 சதவீதம் வரை வரி வசூலிக்கும் திட்டத்தை, கடந்த ஆகஸ்ட் மாதம், 29ம் தேதி முதல் அமல்படுத்தியது.இதற்கு, தமிழக கறிக்கோழி பண்ணையாளர்கள் மட்டுமின்றி, கேரள ஓட்டல் உரிமையாளர் கள் மற்றும் நுகர்வோரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆகஸ்ட், 29ம் தேதிக்கு முன், ஒரு கிலோ உயிர் கறிக்கோழியின் விலை, 60 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், அதற்கு, 13.5 சதவீதம் வரி (8.10 ரூபாய்), போக்குவரத்து செலவு, 8 ரூபாய் (ஒரு கோழிக்கு) ஆகியவற்றை சேர்த்தால், அடக்க விலை, 76.10 ரூபாய் என்ற அளவில் இருக்கும்.
தற்போது, கேரள அரசின், "பிளாட்ரேட்" திட்டப்படி, ஒருகிலோ உயிர்கறிக்கோழியின் விலை, 95 ரூபாய் என்ற அடிப்படையில், 13.5 சதவீதம் வரியாக, 12.82 ரூபாய் செலுத்த வேண்டும். இதனால், அதிகபட்சமாக கிலோவுக்கு, ஆறு ரூபாய் வரை கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் வரியை செலுத்த விரும்பாத தமிழக பண்ணையாளர்களில் சிலர், சென்னை, பெங்களூரு, ஆந்திரா ஆகிய பகுதிகளில் கறிக்கோழியை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால், வாரந்தோறும் கேரளாவிற்கான கறிக்கோழி வரத்து, 20 லட்சம் கிலோவில் இருந்து, 10 லட்சம் கிலோவாக குறைந்தது.
பாதிப்பு:நாமக்கல் கறிக்கோழி உற்பத்தியாளர் சுப்ரமணியம் கூறியதாவது:கேரள அரசின் புதிய திட்டத்தால், இரண்டு வகையில் அந்த மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கறிக்கோழி வரத்து, 50 சதவீதம் குறைந்துள்ளது; கூடுதல் வரிவிதிப்பால், நுகர்வோர், கிலோவுக்கு, 25 ரூபாய் வரை கூடுதல் விலை கொடுத்து கறிக்கோழி வாங்க வேண்டியுள்ளது.இப்பிரச்னைகளை கருத்தில் கொண்டு, கேரள அரசு, மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்தினால், அம்மாநில அரசும், நுகர்வோரும் பயன் பெறுவர். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|