ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.424 குறைவுஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு ரூ.424 குறைவு ... பவர் கிரிட் கார்ப்­ப­ரேஷன் நிறுவனம் ரூ.4,650 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம் பவர் கிரிட் கார்ப்­ப­ரேஷன் நிறுவனம் ரூ.4,650 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம் ...
இந்­தி­யாவின் பால் உற்­பத்தி 14 கோடி டன்­னாக உய­ரும்:அமெ­ரிக்க வேளாண் துறை மதிப்­பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2013
05:14

புது­டில்லி:வரும் 2014ம் ஆண்டில் இந்தி­யாவின், பால் உற்­பத்தி, 14.06 கோடி டன்­னாக அதி­க­ரிக்கும் என, அமெ­ரிக்க வேளாண் துறை மதிப்­பீடு செய்­துள்­ளது. இது, நடப்­பாண்டில் மேற்­கொள்­ளப்­படும் உற்­பத்­தியை விட, 4.5 சத­வீதம் அதி­க­மாகும்.
வேளாண் உற்பத்தி:உல­க­ளவில், பால் உற்­பத்­தியில் மிகப்­பெ­ரிய நாடாகத் திகழும் இந்­தி­யாவில், நடப்பு ஆண்டில், பால் உற்­பத்தி, 13.45 கோடி டன்­னாக இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இது, கடந்­தாண்டை விட, சற்று குறைவாகும்.
இந்­தி­யாவில் பல மாநி­லங்­களில் பரு­வ­மழை பொழிவு நன்கு உள்­ளது. இதனால், நாட்டின் வேளாண் உற்­பத்தி அதி­க­ரித்து, கிராமப் பொரு­ளா­தாரம் வளர்ச்சி காணும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இந்­நி­லையில், பாலுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ள­துடன், நுகர்­வோரின் செல­விடும் வரு­வாயும் அதி­க­ரித்­துள்­ளது. இது போன்ற கார­ணங்­களால், இந்­தி­யாவில் பால் உற்­பத்தி அதி­க­ரிப்­ப­துடன், இதன் பயன்­பாடும் அதி­க­ரிக்கும்.பாலுக்­கான கொள்­முதல் விலை அதி­க­ரித்­துள்­ள­துடன் மதிப்பு கூட்­டப்­பட்ட பால் பொருட்­க­ளுக்­கான தேவையும் வளர்ச்சி கண்­டுள்­ளது.
முதலீடு:இந்­நி­லையில், பல தனியார் துறை நிறு­வ­னங்கள், பால் உற்பத்­தியை அதி­க­ரிக்கும் வகையிலும், பதப்­ப­டுத்­து­வ­தற்கும் அதி­க­ளவில் முத­லீடு மேற்­கொண்டு வரு­கின்­றன.இதை­ய­டுத்து, வரும் 2014ம் ஆண்டில் இந்­தி­யாவில் பால் உற்­பத்தி, 14.06 கோடி டன்­னாக அதி­க­ரிக்கும். இதில், கொழுப்பு நீக்­கப்­பட்ட பால் பவுடர் உற்­பத்தி, 19 ஆயிரம் டன் அதி­க­ரித்து, 4.89 லட்சம் டன்­னாக உயரும்.
இதே போன்று, ஒட்டு மொத்த வெண்ணெய் (நெய் உட்­பட) உற்­பத்­தியும், வரும் ஆண்டில், 3 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 48.80 லட்சம் டன்­னாக அதி­க­ரிக்கும். தற்­போது, இதன் உற்­பத்தி, 47.40 லட்சம் டன்­னாக உள்­ளது.
இந்­தி­யாவில், பால் உற்­பத்தி அதி­க­ரித்து வரும் அதே நேரத்தில், பல்­வேறு விழிப்­பு­ணர்வு பிரச்­சா­ரங்­களால், வரும் ஆண்டில், உள்­நாட்டில் கொழுப்பு நீக்­கப்­பட்ட பால் பவு­ட­ருக்­கான நுகர்வு,4.25 லட்சம்டன்­னாக அதி­க­ரிக்கும். இதன் ஏற்­று­ம­தியும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது.
அமெ­ரிக்க வேளாண் துறையின் மதிப்­பீட்­டின்­படி, உள்­நாட்டில் பால் பயன்­பாடு, கடந்த பத்து ஆண்­டு­களில், ஆண்­டுக்கு, 6.8 சத­வீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்­டுள்­ளது.இந்­தி­யாவில், மக்கள் தொகை பெருகி வரும் அதே நேரத்தில், மக்­களின் வரு­வாயும் உயர்ந்து வரு­கி­றது. பாலில் அதிக புரதச் சத்­துக்கள் இருப்­பதால், மக்கள் பால் பொருட்­களை அதி­க­ளவில் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.
விற்பனை:இந்­தி­யாவின் மொத்த பால் உற்­பத்­தியில், 40 சத­வீதம் பண்ணை­யா­ளர்­களால் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. மீத­முள்ள 60 சத­வீத பால் விற்­ப­னைக்கு அனுப்­பப்­படு­கி­றது. இதில், 70 சத­வீத பால், அமைப்பு சாரா நிறு­வ­னங்கள் வாயி­லா­கவும், 30 சத­வீதம், அமைப்பு சார்ந்த நிறு­வ­னங்கள் வாயி­லா­கவும் விற்­பனை செய்­யப்­படுவ­தாக, அமெ­ரிக்க வேளாண் துறையின் ஆய்வில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)