பதிவு செய்த நாள்
29 அக்2013
00:45

புதுடில்லி: நடப்பாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்தியாவிற்கு வருகை தந்தவர்களின் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 47.41 லட்சமாக அதிகரித்து உள்ளது.விழிப்புணர்வு முகாம்இது, கடந்தாண்டின் இதே
காலத்தில், வருகை தந்த பயணிகள் எண்ணிக்கையை (45.67 லட்சம்) விட, 3.8 சதவீதம் அதிகமாகும் என,மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, வெளி நாட்டு சுற்றுலா பயணிகளைகவரும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளில், விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து, வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அன்னியச் செலாவணி வரத்தும் உயர்ந்துள்ளது.சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 4.36 லட்சமாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதேமாதத்தில், 4.12 லட்சமாக இருந்தது. இருப்பினும், கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்த எண்ணிக்கை, 4.17 லட்சமாக இருந்தது.நடப்பாண்டின் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், சுற்றுலா பயணிகளின் வாயிலாக, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 75,214 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது.
இது, கடந்தாண்டின் இதேகாலத்தில் கிடைத்ததை (66,061 கோடி ரூபாய்) விட, 13.9 சதவீதம் அதிகமாகும்.கணக்கீட்டு காலத்தில், டாலர் அடிப்படையில், சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த அன்னியச் செலாவணி, 5.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,249 கோடி டாலரிலிருந்து, 1,320 கோடி டாலராக உயர்ந்துள்ளது.அன்னிய செலாவணிஅதேசமயம், செப்டம்பர் மாதத்தில், வெளி நாட்டு சுற்றுலா பயணிகள்வாயிலாக கிடைத்த அன்னியச்செலாவணி, 3.6 சதவீதம் குறைந்து, 118 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது, கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 122 கோடி டாலராக இருந்ததுஎன, சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|