இணைதள நிறுவனங்கள் பங்கு மூதலீட்டில் இறங்க ஆர்வம் இணைதள நிறுவனங்கள் பங்கு மூதலீட்டில் இறங்க ஆர்வம் ... டீசல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்த ; மானிய விலை சிலிண்டர் 6-ஆக குறைக்க பரிந்துரை!! டீசல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்த ; மானிய விலை சிலிண்டர் 6-ஆக குறைக்க பரிந்துரை!! ...
9.56 பில்லியன் டாலர் லாபம்: சாம்சங்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2013
14:58

சியோல்: சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 9.56 பில்லியன் டாலர் நிகர லாபத்தை நடப்பு காலாண்டில் ஈட்டியுள்ளது அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக விளங்கிய அதன் ஸ்மார்ட் போன்களின் விற்பனைக்கும் மைக்ரோ சிப்பின் அதிகப்படியான விலைக்கும் நன்றியை தெரிவித்துள்ளது. கைப்பேசி, தொலைகாட்சி மற்றும் மெமரி சிப்ஸ் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இதன் சென்ற வருட நிகர லாபத்தை விட இந்த வருட லாபம் 26 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரை கணக்கிட்ட போது அதன் வருவாய் 13.2 சதவீதம் அதிகரித்து 59.59 பில்லியன் டாலராக இருப்பது தெரிய வந்துள்ளது. அதே போல் அதன் செயல்பாட்டு லாபம் 26 சதவீதம் அதிகரித்து 10.56 பில்லியன் டாலராக இருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் தன்னுடைய லாபம் அடுத்த காலாண்டில் மேலும் அதிகரிக்கும் என்று கிறிஸ்மஸ் விற்பனையை மனதில் வைத்து கொண்டு சாம்சங் நிறுவனம் தன்னுடைய லாப அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் போட்டியும் அதிகமாக இருக்கும், இத்தகைய போட்டியை எதிர்கொள்ள சில புதிய திட்டத்தை கையால உள்ளதாகவும் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)