பதிவு செய்த நாள்
20 நவ2013
00:25

மும்பை:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, ஏழு மாத காலத்தில், பயணிகள் வாயிலான ரயில்வே வருவாய், 21,247 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 18,017 கோடி ரூபாயாக இருந்தது.
ஆக, மதிப்பீட்டு காலத்தில், பயணிகள் வாயிலான ரயில்வே வருவாய், 17.93 சதவீதம்
வளர்ச்சி கண்டுள்ளது என, ரயில்வே வாரியத்தின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதே காலத்தில் சரக்கு போக்குவரத்து வாயிலான, ரயில்வே வருவாய், 9.56 சதவீதம்
அதிகரித்து, 47,350 கோடியிலிருந்து, 51,876 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், இதர பிரிவுகள் வாயிலான வருவாய், 22.68 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,783 கோடியிலிருந்து, 2,187 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மதிப்பீட்டு காலத்தில், ரயில்வேயின் ஒட்டு மொத்த வருவாய், 12.53 சதவீதம் வளர்ச்சி கண்டு, 68,634 கோடி ரூபாயிலிருந்து, 77,235 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்
நிலையில், கணக்கீட்டு காலத்தில், முன்பதிவு செய்து கொண்ட ரயில் பயணிகளின்
எண்ணிக்கை, 0.60 சதவீதம் குறைந்து, 49,973.36 லட்சத்திலிருந்து, 49,672.60 லட்சமாக
சரிவடைந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|