பதிவு செய்த நாள்
22 நவ2013
01:08

மும்பை: நடப்பு நிதியாண்டில், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், 17 – 18 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்:பொதுக் காப்பீட்டுத் துறை, பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும், வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வளர்ச்சிக்கு, நடுத்தர வருவாய் பிரிவினரின் பங்களிப்பு, குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.
குறிப்பாக, மருத்துவ பராமரிப்பு துறையில், நடுத்தர வருவாய் பிரிவினரின் பங்களிப்பு அதிகம் உள்ளது. இத்துடன் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும், பொதுக் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சிக்கு துணை நிற்கிறது.இதன் காரணமாக, நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டில், பொதுக் காப்பீட்டுத் துறையின் பிரிமியம் வருவாய், கடந்த நிதியாண்டை விட, 17 – 18 சதவீதம் வளர்ச்சி கண்டு, 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.
மருத்துவக் காப்பீடு போன்று, வேளாண்காப்பீடு குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. இதனால், நடப்பு நிதியாண்டில், வேளாண் காப்பீட்டு பிரிமியம், 4,500 கோடி ரூபாயை தாண்டும் என, தெரிகிறது.வரும், 2014 – 15ம் நிதியாண்டில், மருத்துவ காப்பீட்டு பிரிவின் பிரிமியம் வருவாய், 20 ஆயிரம் கோடி ரூபாயை எட்ட வாய்ப்புள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|