பதிவு செய்த நாள்
25 நவ2013
05:07

பொதுத் துறையைச் சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,), அதன் ஜீவன் மித்ரா, அன்மோல் ஜீவன் உள்ளிட்ட, 14 ஆயுள் காப்பீட்டு திட்டங்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.இவற்றில், கன்வர்ட்டபில் டெர்ம் அஸ்யூரன்ஸ், சில்ட்ரன் டிபர்டு எண்டோவ்மென்ட் அஸ்யூரன்ஸ் உள்ளிட்ட, 7 காப்பீட்டு திட்டங்களின் விற்பனை, கடந்த, 16ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா) உத்தரவிட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. இவற்றை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பின்பற்றுவதற்கான காலக்கெடு, வரும், டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, ஆயுள் காப்பீட்டு துறையை சேர்ந்த பல நிறுவனங்கள், அவற்றின் பழைய காப்பீட்டு திட்டங்களை திரும்பப் பெற்று வருகின்றன. புதிய விதிமுறைகளின்படி, காப்பீட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.இதன்படி, எல்.ஐ.சி., நிறுவனத்தின், ஜீவன் மித்ரா, ஜீவன் பராமுக், பீமா அக்கவுண்ட் 1 மற்றும் 2 ஆகிய திட்டங்கள் கடந்த, 23ம் தேதி, திரும்பப் பெறப்பட்டன. நடப்பு நவம்பர், 30ம் தேதியுடன், புதிய ஜீவன் நிதி மற்றும் அன்மோல் ஜீவன் 1 ஆகிய திட்டங்கள் நிறுத்தப்படுகின்றன.
குழு காப்பீடு செய்துள்ளவர்கள், விரும்பினால், நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள மேம்படுத்தப்பட்ட குழு காப்பீட்டு திட்டங்களுக்கு மாறலாம்.நடப்பு, 2013 – 14ம் நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான அரையாண்டில், எல்.ஐ.சி., நிறுவனத்தின், காப்பீட்டு பிரிமியம் வசூலில், 7 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் பிரிமியம் வருவாய், 7.26 சதவீதம் அதிகரித்து, 37,906 கோடி ரூபாயாக உள்ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|