பதிவு செய்த நாள்
28 நவ2013
00:39

புதுடில்லி:உலகிலேயே இந்தியாவில் தான், நிறுவனங்களுக்கு விதிக்கப் படும் வரி விகிதம் அதிகம் என, உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஆய்வு:இவ்வங்கி, பிரைஸ் வாட்டர் கூப்பர் நிறுவனத்துடன் இணைந்து, 2004 முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலத்தில், சுலபமாக வரி செலுத்தும் வசதி கொண்ட, 189 நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
'செலுத்தும்வரிகள்–2014' என்ற தலைப்பில்வெளியிடப்பட்ட அந்தஆய்வறிக்கையின் விவரம் வருமாறு:உலகிலேயே, இந்தியாவில் தான் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் அதிகமாக உள்ளன. மேலும், வரி இனங்களும், உலக நாடுகளின் சராசரி எண்ணிக்கையை விட அதிகம் உள்ளது.
இதன் காரணமாக, சுலபமாக வரி செலுத்தும் வசதி கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா, 158வது இடத்தில் உள்ளது.இந்தியாவில், லாபம், ஊதியம் மற்றும் இதர வரி இனங்களின் கீழ், 33 வகையான வரி விதிப்புகள் உள்ளன. இவற்றுக்கான ஒட்டுமொத்த வரி விகிதம், 62.8 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நிறுவனங்கள், வரி செலுத்துவதற்கு சராசரியாக, 243 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன.
இது, சீனா மற்றும் ஜப்பானில், முறையே, 318 மற்றும் 330 மணி நேரமாக உள்ளன. ர்வதேச அளவில், சராசரியாக, ஒரு நிறுவனம், ஒட்டுமொத்த அளவில், 26.7 வரி இனங்களின் கீழ், 43.1 சதவீத வரியை, 268 மணி நேரத்தில் செலுத்துகிறது.இந்த வகையில், வரி இனங்களும், வரி விகிதமும் குறைவாக உள்ள நாடுகளில், ஐக்கிய அரபு நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன.
அடுத்த இடங்களில், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை உள்ளன. ரஷ்யா, சீனா ஆகியவை, முறையே, 56 மற்றும் 120வது இடங்களில் உள்ளன. பிரேசில், 159வது இடத்தை பிடித்துள்ளது.தெற்காசியாவை சேர்ந்த எட்டு நாடுகளில், இந்தியாவில் மட்டும் தான், வரி கணக்குகளை தாக்கல் செய்வது, வரி செலுத்துவது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளை மேற்கொள்ள, 'ஆன்லைன்' வசதி உள்ளது.ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், இந்த வசதி, கடந்த ஆண்டு, இலங்கை, மாலத் தீவு ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.கடந்த ஒன்பது ஆண்டுகளில், சீனாவில், 28 வரி இனங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில், தலா 22 ஆக உள்ளது. ழில்நுட்பம்மின்னணு தொழில்நுட்பத்தில், வரி கணக்கு தாக்கல் செய்வது, வரி செலுத்துவது போன்ற வசதிகள் அறிமுகமானதால், வரி இனங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|