பதிவு செய்த நாள்
28 நவ2013
01:23

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்றும், மந்தமாகவே இருந்தது. நவம்பர் மாதத்திற்கான முன்பேர ஒப்பந்தங்கள், நாளையுடன் முடிவடைவதையடுத்து, முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பங்கு வியாபாரத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சற்று சரிவுடன் முடிவுஅடைந்தன.இதர ஆசிய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. அதேசமயம், ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. நேற்றைய வர்த்தகத்தில், மின்சாரம், ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப்பட்டது. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள், நுகர் பொருட்கள், மோட்டார் வாகனம், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 4.76 புள்ளிகள் சரிவடைந்து, 20,420.26 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தி்ன் இடையே, பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,482.67 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,348.06 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி., சிப்லா, மாருதி உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாட்டா மோட்டார்ஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனப் பங்கின் விலை மாற்றமின்றியும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 2 புள்ளிகள் குறைந்து, 6,057.10 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தி்ன் இடையே அதிகபட்சமாக, 6,074 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,030.30 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|