பதிவு செய்த நாள்
03 டிச2013
00:41
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 96 ரூபாய் குறைந்து, 22,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச அளவில், தங்கம் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால், உள்நாட்டில், ஆபரணங்கள் விலை குறைந்துள்ளது.சென்னையில், கடந்த சனிக்கிழமையன்று, 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 2,865 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,920 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 30,345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நடப்பு வாரத்தின் துவக்க நாளான நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 12 ரூபாய் குறைந்து, 2,853 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 96 ரூபாய் சரிவடைந்து, 22,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 130 ரூபாய் குறைந்து, 30,215 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 47.30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 44,180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|