தேவை குறைந்ததால்தேயிலை விலை சரிவுதேவை குறைந்ததால்தேயிலை விலை சரிவு ... மருத்­துவ காப்­பீட்டு பிரி­மியம்ரூ.32,038 கோடி­யாக உயரும் மருத்­துவ காப்­பீட்டு பிரி­மியம்ரூ.32,038 கோடி­யாக உயரும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிறு­வ­னங்­க­ளுக்கு வங்கி உரிமம்: பார்லி., நிலை ­குழு எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2013
03:03

புது­டில்லி: 'கார்ப்­பரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு, வங்கி துவங்கும் உரி­மையை ரிசர்வ் வங்கி வழங்கக் கூடாது' என, பார்­லிமென்ட் நிலைக்­குழு தெரி­வித்­து உள்­ளது.இது குறித்து, இக்­குழு, லோக்­ச­பாவில் தாக்கல் செய்­துள்ள அறிக்கை விவரம்:புதிய வங்கி துவங்க, கார்ப்­பரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி வழங்க கூடாது.விதிமுறைகள்இந்­திய வங்கித் துறை, பொது­மக்­களின் பணம் மற்றும் அவர்­களின் நலனில் அக்­க­றை­யுள்ள, மிகப் பெரிய வர்த்­த­கத்தை கொண்­ட­தாக விளங்­கு­கி­றது.அதனால், வங்கித் துறை­யையும், தொழில்­து­றை­யையும் தனித் தனி­யாக வைத்­தி­ருப்­பதே நல்­லது என, குழு கரு­து­கி­றது.

பெரிய நிறு­வ­னங்கள் துவக்கும் வங்­கிகள், அவற்றின் முத­லா­ளி­க­ளுக்கு சாத­க­மாக நடந்து கொள்­வதை தடுக்க, ரிசர்வ் வங்­கியின் விதி­மு­றைகள் எந்த அள­விற்கு உதவும் என, தெரி­ய­வில்லை.முன்­னு­ரிமை துறை­க­ளுக்கு தாராள கடன், குக்­கி­ரா­மங்­க­ளுக்கும் வங்கி வசதி உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்கள் தேசிய வங்கிக் கொள்­கை­யாக உள்­ளன.
ஆனால், சென்ற 2012–13ம் நிதி­யாண்டு நில­வ­ரப்­படி, தனியார் துறை வங்கி கிளை­களில், 17 சத­வீதம் மட்­டுமே கிரா­மப்­பு­றங்­களில் துவங்­கப்­பட்­டுள்­ளன.

இப்­ப­டிப்­பட்ட சூழலில், கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் புதிய வங்­கி­க­ளாலும், மேற்­கண்ட தேசிய வங்கிக் கொள்­கையின் சாராம்­சங்­களை நிறை­வேற்ற இய­லாது.வங்­கிகள், நகர்­பு­றத்தில் திறக்கும் ஒவ்­வொரு மூன்று கிளை­க­ளுக்கும், தலா ஒரு கிளை வீதம், கிரா­மப்­பு­றத்தில் அமைக்க வேண்டும் என்­பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்ய வேண்டும்.புதிய வங்கி துவங்க, குறைந்­த­பட்­ச­மாக, 500 கோடி ரூபாய் மூல­தனம்தேவை என்ற விதி­மு­றையை, 1,000கோடி ரூபா­யாக உயர்த்த வேண்டும்.இதனால், மேம்­போக்­காக வங்கித் துறையில் கால் பதிக்க விரும்பும் நிறு­வ­னங்­களின் வருகை குறையும்.வங்கிச் சேவை அதிக அளவில் பர­வ­லாக இல்­லாத ஒரு நாட்டில், வங்கிக் கிளைகள் ஒருங்­கி­ணைப்பு, வங்கி கிளைக்­கான இடம், பணி­யாளர் தேர்வு என, பல்­வேறு செல­வி­னங்கள் உள்­ளன.

மூலதனம்அதனால், புதிய வங்­கிகள், குறைந்­த­பட்­ச­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள, 500 கோடி ரூபாய் மூல­த­னத்தில், ரிசர்வ் வங்கி நிர்­ண­யித்­துள்ள இலக்­கு­களை எட்­டு­வது கடினம். இவ்­வாறு அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.அண்­மையில், புதிய வங்கி உரி­மத்­திற்­காக விண்­ணப்­பித்­ததை டாட்டா சன்ஸ் திரும்பப் பெற்­றது. இதைத் தொடர்ந்து மேலும் பல நிறு­வ­னங்கள், ரிசர்வ் வங்­கியின் கடு­மை­யான விதி­முறை கார­ண­மாக, புதிய வங்கி துவங்கும் திட்­டத்தை கைவிட உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.வரும், 2014ம் ஆண்டு ஜன­வ­ரியில், புதிய வங்கி உரிமம் கோரி வந்த விண்­ணப்­பங்கள் தொடர்­பாக, ரிசர்வ் வங்கி, இறுதி முடி­வெ­டுக்க உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)