பதிவு செய்த நாள்
10 டிச2013
03:06
சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்திருந்தது.சர்வதேச அளவில், கடந்த வாரத்தில், தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டதால், உள்நாட்டிலும், இதே நிலை நீடித்தது.சென்னையில், கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,832 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,990 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, 2,817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 120 ரூபாய் சரிவடைந்து, 22,536 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 160 ரூபாய் குறைந்து, 29,830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஒரு கிராம் வெள்ளி, 46.10 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 43,065 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|