இயற்கை எரிவாயு விலை உயர்வால் உர நிறுவனங்களுக்கு ரூ.9,000 கோடி செலவுஇயற்கை எரிவாயு விலை உயர்வால் உர நிறுவனங்களுக்கு ரூ.9,000 கோடி செலவு ... பொது தேர்தலுக்கு முன் முக்கிய மசோதாக்கள் : நிறைவேற்ற ரகுராம் அறிவுரை பொது தேர்தலுக்கு முன் முக்கிய மசோதாக்கள் : நிறைவேற்ற ரகுராம் அறிவுரை ...
நாட்டின் ஏற்றுமதி 2,460 கோடி டாலராக அதிகரிப்பு : இறக்குமதி வெகுவாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2013
00:35

புதுடில்லி: நாட்டின் ஏற்றுமதி, சென்ற நவம்பர் மாதத்தில், 2,460 கோடி டாலர் (1.48 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டின் இதே மாதத்தில், 2,325 கோடி டாலராக (1.39 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.ஆக, மதிப்பீட்டு மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 5.86 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்கள்: இருப்பினும், முந்தைய ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், கணக்கீட்டு மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி குறைந்து போய் உள்ளது.பெட்ரோலிய பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், மருந்துகள் ஆகியவை நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன.மதிப்பீட்டு மாதத்தில், மேற்கண்ட பொருட்களின் ஏற்றுமதி குறைந்ததே, ஒட்டு மொத்த ஏற்றுமதி சரிவிற்கு காரணம் என, மத்திய வர்த்தக செயலர் எஸ்.ஆர். ராவ் தெரிவித்தார்.
நடப்பாண்டு நவம்பரில், நாட்டின் இறக்குமதி, 16.3 சதவீதம் சரிவடைந்து, 3,383 கோடி டாலர் (2.03 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு காணப்படாத குறைந்தபட்ச அளவாகும்.கணக்கீட்டு மாதத்தில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மிகவும் சரிவடைந்துள்ளதை அடுத்து, நாட்டின் ஒட்டு மொத்த இறக்குமதி குறைந்து உள்ளது.
வர்த்தக பற்றாக்குறை: மதிப்பீட்டு மாதத்தில், ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகமாக இருப்பதால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 923 கோடி டாலர் என்ற அளவில் குறைந்துள்ளது.எனினும், இது, நடப்பு நிதியாண்டில், காணப்படும் இரண்டாவது குறைந்த பட்ச அளவாகும். இதற்கு முன், சென்ற செப்டம்பரில், வர்த்தக பற்றாக்குறை, 676 கோடி டாலர் என்ற அளவில் மிகவும் குறைந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய்: சென்ற 2012ம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1,720 கோடி டாலர் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
சென்ற நவம்பர் மாதத்தில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி, 80.49 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 105 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 540 கோடி டாலராக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
மேலும், மதிப்பீட்டு மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியும்,1.1 சதவீதம் சரிவடைந்து, 1,296 கோடி டாலராக குறைந்துள்ளது.கச்சா வைரத்தின் விலை உயர்வால், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, கணக்கீட்டு மாதத்தில் மிகவும் சரிவை கண்டுள்ளது.
மேலும், பராமரிப்பு பணிகளுக்காக, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டதால், பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து போயுள்ளது என, ராவ் மேலும் கூறினார்.
வளர்ச்சி: நடப்பு 2013–14ம் நிதிஆண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான முதல் எட்டு மாதங்களில், நாட்டின் ஏற்றுமதி, 6.27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 20,400 கோடி டாலராக (12.24 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
அதேசமயம், நாட்டின் இறக்குமதி, 30,400 கோடி டாலராக(18.24 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 10,000 கோடி டாலர் (6 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)