பதிவு செய்த நாள்
14 டிச2013
00:39

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்றும் சுணக்கமாகவே இருந்தது.சென்ற அக்டோபர் மாதத்தில், தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் நவம்பரில் சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது போன்றவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ வங்கி, அடுத்த வாரம் வெளியிட உள்ள அதன் நிதி ஆய்வு கொள்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மேம்படதுவங்கியுள்ளதையடுத்து, அந்நாட்டு மத்திய வங்கி, ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை திரும்பப்பெறும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 210.03 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,715.58 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,867.17 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 20,692.67 புள்ளிகள் வரையிலும் சென்றது.சென்செக்ஸ்கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், பீ.எச்.இ.எல்., டாட்டா பவர், கெயில், டாக்டர் ரெட்டீஸ் லேப் உள்ளிட்ட, 24 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், விப்ரோ, மகிந்திரா, கோல் இந்தியா உள்ளிட்ட, 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், நிப்டி, 68.65 புள்ளிகள் குறைந்து, 6,168.40 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,208.60 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 6,161.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|