பதிவு செய்த நாள்
15 டிச2013
00:14

சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 72 ரூபாய் அதிகரித்து, 22,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,813 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,504 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,790 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஒன்பது ரூபாய் உயர்ந்து, 2,822 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 72 ரூபாய் அதிகரித்து, 22,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 90 ரூபாய் உயர்ந்து, 29,880 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 47.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 44,140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த திங்களன்று (9ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,817 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,536 ரூபாய்க்கும் விற்பனையானது.
ஆக, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கம் விலை கிராமுக்கு, ஐந்து ரூபாயும், சவரனுக்கு, 40 ரூபாயும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|