ரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவுரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவு ... 2 நாட்களில் தங்கம்சவரனுக்கு ரூ.216 வீழ்ச்சி 2 நாட்களில் தங்கம்சவரனுக்கு ரூ.216 வீழ்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் பிரேக்டவுனா... ‘மை டிவிஎஸ்’ இருக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2013
15:57

சாலையில் கார் பழுதடைந்தால், இனி கவலை கொள்ளவோ அல்லது மெக்கானிக்கை தேடி அலையவோ வேண்டிய அவசிய மில்லை. "மை டிவிஎஸ்' ன், 24x7 அவசர கால சேவையில் உறுப்பினராகி விட்டால், நீங்கள் இந்தியாவின் எந்த மாநிலத்தில் (ஜம்மு - காஷ்மீர், சில வட கிழக்கு நகரங்கள் தவிர) இருந்து, தொடர்பு கொண்டாலும், "மை டிவிஎஸ்' தன் வாடிக்கையாளர் மையம் மூலம், துரிதமாக செயல் பட்டு, உங்களை மீண்டும் இயல்பாக பயணிக்க வைத்து விடும். 4,000க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட சேவை வல்லுனர்களை, நாடு முழுவதி லும் கொண்டுள்ள "மை டிவிஎஸ்', (டோயில்) இழுத்துச் செல்லுதல் உட்பட விரிவான சேவைகளை, வாடிக்கையாளர் களுக்கு வழங்கி வருகிறது.

நூறு ஆண்டுகால பிரசித்தி பெற்ற டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான "மை டிவிஎஸ்' 10 ஆண்டுகளாக கார்களுக் கான, "பிரேக் டவுன்' சர்வீஸ்களை, 24து7 சேவை மூலம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 2003ம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப் பட்ட இச்சேவை, இன்று இந்தியா முழுவதிலும் உள்ள பெரு, சிறு மற்றும் குறு நகரங்களிலும் கால் பதித்து, மிகப்பெரிய நெட்ஒர்க்குடன், சேவையை வழங்கி வருகிறது.

மாதந்தோறும், 10 ஆயிரம் பிரேக்டவுன் சர்வீஸ்களை துரிதமாகவும், சிறப்பாக வும் செய்து வருகின்றன. இன்று, இந்தியாவிலேயே மிகப் பெரிய சொந்த மற்றும் ஒப்பந்த மெக்கானிக் வல்லுனர் களை கொண்டு, வாடிக்கையாளர்கள் சேவையில், 90 சதவீதம் அதிகமானவர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

"மை டிவிஎஸ்' தற்போது, இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கும், 24x7 சேவை வழங்கி வருகிறது. மேலும், இரண்டு முதல் ஏழாண்டு வரை ஆயுள் கொண்ட கார்களுக்கு, "மை டிவிஎஸ்' கார் சர்வீஸ் மையங்கள் மூலமாக, "வாரன்டி' சேவையையும் வழங்க துவங்கியுள்ளது. ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், கார் வாடிக்கையாளர்கள் கார் உதிரிபாகங்கள் பழுதடைவது குறித்து கவலை கொள்ள தேவையில்லை. அதோடு, "வாரன்டி' செய்யப்பட்ட கார் என்பதால், விற்கும் போது, காருக்கு கூடுதல் விலையும் கிடைக்க, வாய்ப்பு உண்டு.

"மை டிவிஎஸ்', 24x7 சேவை வர்த்தகத்தின் கீழ் வழங்கி வரும், மற்றொரு சேவை "டெலி மாடிக்ஸ்!'. இன்டர்நெட் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும், "டெலிமாடிக்ஸ்' கருவியை, தங்கள் காரில் பொருத்துவதன் மூலம், டிரைவர் வைத்திருப்பவர்கள், கார் இருக்கும் இடத்தை, வீட்டிலிருந்த படியே கண்காணிக்க முடியும்.

மேலும், குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது, ஆள்நடமாட்டமில்லாத இடங்களில், கார் ரிப்பேர் அடைந்தாலோ அல்லது வழி தெரியாமல் தவித்தாலோ, "டெலிமேடிக்ஸ்' கருவியின் உதவியுடன் "மை டிவிஎஸ்'-ன் 24து7 சேவை மையத்தைத் தொடர்புக் கொண்டு, விரைவில் மீண்டு வர முடியும்.

மேலும் விவரங்களுக்கு : 9944906692.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)