கடலை எண்ணெய் விலை உயர்வுகடலை எண்ணெய் விலை உயர்வு ... வெளிநாடு வாழ் இந்தியர்கள் குடும்பத்திற்கு அதிகம் செலவழிப்பு வெளிநாடு வாழ் இந்தியர்கள் குடும்பத்திற்கு அதிகம் செலவழிப்பு ...
நாட்டின் ஐ.டி., சேவை துறை 8.3 சதவீதம் வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2013
04:31

நடப்பு 2013ம் ஆண்டில், நாட்டின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.,) சேவை துறை, கடந்தாண்டை விட, 8.3 சதவீதம் வளர்ச்சி காணும் என, ஐ.டீ.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார சுணக்க நிலை மற்றும் உள்நாட்டில், தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கு செலவிடுவது குறைந்துள்ள நிலையிலும், நடப்பாண்டில், ஐ.டி., சேவை துறை, 8.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 44,220 கோடி ரூபாயாக (797 கோடி டாலர்) அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எதிர்பார்ப்பு:நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இத்துறை, 7.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 24,339 கோடி ரூபாயாக (440 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.நடப்பாண்டில், எதிர்பார்ப்பிற்கு மாறாக, ஐ.டி., சேவை துறையின் வளர்ச்சி மந்தமாக உள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்திற்காக அதிகளவில் செலவிடும் தொலைத் தொடர்பு, வங்கி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு போன்ற துறைகள் மந்த கதியில் உள்ளதால், நாட்டின் ஐ.டி., சேவை துறையின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.
மத்திய அரசு, தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்காக செலவிடுவது குறைந்துள்ளது. அதேசமயம், மாநில அரசுகளும், பொதுத் துறை நிறுவனங்களும், ஐ.டி., சேவையை பெறும் வகையில், அதிகளவில் செலவிட்டு வருகின்றன. இதன் காரணமாகவே, இத்துறை மிதமான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.மேற்கண்ட துறைகள் தவிர, பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றி தரும், நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்காக அதிகம் செலவிட்டு வருகின்றன. நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இத்துறை நிறுவனங்கள், ஐ.டி., சேவைகளுக்காக அதிகளவில் செலவிட்டுள்ளன.
பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றி தரும் பிரிவில், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில் செயல்பட்டு வரும், இத்துறை நிறுவனங்களின் செயல்பாடு நன்கு அமைந்துள்ளது.வரும் 2014ம் ஆண்டில், பார்லி மென்ட் தேர்தல் வரவிருப்பதால், ஐ.டி., சேவைகளுக்கான செலவினம், அவ்வாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் குறைவாகவே இருக்கும் என்ற மதிப்பீடும் உள்ளது.
வரவேற்பு:வெளிநாடுகளில், இந்திய தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கு வரவேற்பு காணப்படுகிறது. பல பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய ஐ.டி., சேவை நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களை நீட்டித்துள்ளன.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)