பதிவு செய்த நாள்
28 டிச2013
02:35

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ தலா, 0.56 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தன.
அமெரிக்காவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை, மதிப்பீட்டை விட குறைந்துள்ளது என்ற செய்தியால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்றாகவே இருந்தது. நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், நுகர் பொருட்கள், மருந்து உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
அதேசமயம், எண்ணெய், எரிவாயு மற்றும் மோட்டார் வாகன துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 118.99 புள்ளிகள் அதிகரித்து, 21,193.58 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 21,235.14 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 21,113.25 புள்ளிகள் வரையிலும் சென்றது. ‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டி.சி.எஸ்., சிப்லா, சேசா ஸ்டெர்லைட், இந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட, 18 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ரிலையன்ஸ், ஆக்சிஸ் பேங்க், மாருதி சுசூகி, பீ.எச்.இ.எல்., ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட, 12 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.
தேசியபங்குச் சந்தையின் குறியீட்டு எண், நிப்டி’ 34.90 புள்ளிகள் உயர்ந்து, 6,313.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,234.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,289.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|