சென்னை ரமி மாலில் "ஹைடெக்' டாஸ்மாக் கடை துவக்கம்சென்னை ரமி மாலில் "ஹைடெக்' டாஸ்மாக் கடை துவக்கம் ... ஜன., 1 முதல் முட்டைக்கு ஒரே விலை : ஒருங்கிணைப்பு குழு தலைவர் தகவல் ஜன., 1 முதல் முட்டைக்கு ஒரே விலை : ஒருங்கிணைப்பு குழு தலைவர் தகவல் ...
30 நாட்களாக விலையில் பெரிய மாற்றம் இல்லை : தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2013
17:27

சேலம்: தங்கத்தின் விலை, ஒரு மாதமாக ஏற்றம் காணாததால், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.

கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், தங்கத்தின் விலையில், ஏற்றம் காணப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால், தங்கத்தின் விலையில் ஏற்றம் இருந்தது. தற்போது, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில், சற்று இறக்கம் ஏற்பட்டுள்ளது.தங்கத்தின் விலை, என்னதான் உயர்வு ஏற்பட்டாலும், முகூர்த்தம் மற்றும் முக்கிய தினங்களில், தங்கத்தின் விற்பனை, அதிகமாகவே காணப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக, ஒரு கிராம் தங்கத்தின் விலை, 2,780 முதல், 2,790 ரூபாய் வரை மட்டுமே மாறி மாறி விற்பனைக்கு வருகிறது.

நேற்று முன்தினம், ஒரு கிராம் தங்கம், 2,786 ரூபாயாக இருந்தது. நேற்று, 2,785 ரூபாயாக இருந்தது. ஒரு பவுன் தங்கம் நேற்று, 22, 280 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு மாதமாக, ஒரு பவுன் தங்கத்தின் விலை, 22, 200 முதல், 23,000 ரூபாய் வரை, மாறி மாறி விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்துக்கு, நிலையான விலை கிடைக்கவில்லை என, தங்க நகைக்கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, சேலம் தங்க நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:தங்கத்தின் விலையில், ஒரு மாதமாக, பெரிய மாற்றம் எதுவும் இல்லை. சற்று விலை குறைந்து இருப்பதால், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தைப்பொங்கல் சமயத்தில், தங்கத்தின் விலையில் ஏறுமுகம் இருக்கும் என்பதால், இப்போதே சிலர், தங்கம் வாங்க ஆரம்பித்து விட்டனர்.

அதேபோல், 25 நாட்களுக்கு முன், 10 கிராம் வெள்ளி, 60 ரூபாய்க்கு விற்பனையானது. படிப்படியாக வெள்ளி விலையும் குறைந்து, சில நாட்களாக, வெள்ளியின் விலை, ஒரு கிராம், 45 முதல், 47 வரை, மாறி மாறி விற்பனை செய்யப்படுகிறது.வெளிநாடுகளில், ஆண்டு இறுதிக் கணக்கு முடிக்கும் மாதமாக, டிசம்பர் மாதம் உள்ளது. கணக்குகளை முடிக்கும் வகையில், அங்குள்ள தங்க நகை மார்க்கெட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையிலும், தங்க நகைகள் விலை உயர வாய்ப்பு கிடைக்கவில்லை. அனைத்து இடங்களிலும், தங்கம் விற்பனை தொடரும் பட்சத்தில் மட்டுமே, விலை உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)