பதிவு செய்த நாள்
28 டிச2013
17:34

இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பும், வாகன உதிரி பாக உற்பத்தியாளர் கூட்டமைப்பும், இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்புடன் சேர்ந்து, பிப்ரவரி 6ம் தேதி முதல் 12ம் தேதி வரையில், க்ரேட்டர் நொய்டாவில் உள்ள, இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் நடத்தப்படவுள்ளது.
முதல் ஆட்டோ எக்ஸ்போ, 1986ம் ஆண்டு டில்லியில் நடத்தப்பட்டது. 2012ல் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. டில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த வாகன கண்காட்சி, பெருகி வரும் வாகன ஆர்வலர்களின் வருகையையும், கலந்து கொள்வோரின் அதிக எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு இரண்டு இடங்களில் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பிரகதி மைதானத்தில் காம்ப்ளென்ட் ஷோவும், நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போவும் நடைபெற உள்ளது, குறிப்பிடத்தக்கது.
வாகன உற்பத்தியாளர்களுக்கு, தங்களின் பொருட்களை அறிமுகப்படுத்த சிறந்த தளமாகவும், வாகன ஆர்வலர்கள் விரும்பும் சிறந்த கண்காட்சியாகவும், உலகளவில் பிரபலமானதுமான இந்த ஆட்டோ எக்ஸ்போவில் வாகன உற்பத்தி ஜாம்பவான்கள் தவிர, தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், ஸ்வீடன், தைவான், யு.கே., அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கலந்து கொள்கின்றனர். பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும், மிகப் பெரிய கண்காட்சி இது என்பதும், குறிப்பிடத்தக்கதாகும்.
12வது ஆட்டோ எக்ஸ்போவான தி மோட்டார் ஷோ, 2014 இல் கலந்து கொள்வோர், இணையம் மூலம் தங்கள் நுழைவுச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். நுழைவுச் சீட்டின் விலை வார நாட்களுக்கு, 200 ரூபாய் மற்றும் வார இறுதி நாட்களுக்கு, 300 ரூபாய் பொதுமக்களுக்கு என்றும் தொழில் நிமித்தமாக வருவோருக்கு 500 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|