பதிவு செய்த நாள்
30 ஜன2014
15:06
கடந்தாண்டு கடைசியில் அறிமுகப்படுத்தப்பட்ட ராயல், என் பீல்ட் கான்டினென்டல் ஜிடி ராயல் என் பீல்ட் அபிமானிகளின் உள்ளம் கவர்ந்த வாகனமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. மிகவும் லேசான, அதி விரைவான, மிகுந்த செயல் திறன் கொண்டதாக, ரேசர் பைக் கான்டினென்டல் ஜிடி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன், 535 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் ஏர் கூல்ட் இன்ஜின் 29.1 பிஎச்பி சக்தியையும், 44 என்எம் (4000 ஆர்பிஎம்மில்) இழுப்பு விசையையும் வழங்குகிறது. டிஜிட்டல் எலக்ட்ரானிக் இக்னீஷன், வெட் மல்டி ப்ளேட் க்ளட்ச் கொண்டு, 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் கொண்டு இயங்குகிறது. ஒருவர் அமரக்கூடிய இருக்கை கொண்டு, புராதன தோற்றத்துடன் கூடிய கம்பீர வடிவமைப்புடன் புதுமையாக வித்தியாசமாக தோற்றமளிக்கிறது கான்டினென்டல் ஜிடி. ராயல் என்பீல்டின் பாரம்பரியமும், செயல்திறனும் முழுமையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கான்டினென்டல் ஜிடி மூலம், இந்தியாவில் ரேசர் பைக் பிரிவில் முதன்முதலாக நுழைந்து வெற்றி பெற்றுள்ளது இந்நிறுவனம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|