பதிவு செய்த நாள்
16 பிப்2014
00:21

நாமக்கல்:குளிர்கால சீசன் முடிந்து விட்டதால், தேசிய அளவில், முட்டை கொள்முதல் விலை, தொடர்ந்து, சரிவை நோக்கிச் செல்கிறது. இதனால், பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தேசிய அளவில், ஆந்திரா, 30 சதவீதம், தமிழகம், 20 சதவீதம், மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகியவை, 10 சதவீதம், கர்நாடகா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில், 5 சதவீத அளவுக்கு, முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.தினசரி நுகர்வு, ஏற்றுமதி வாய்ப்பு, மூலப்பொருட்கள் விலை உள்ளிட்டவை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டி மூலம், முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த, 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி, நடப்பாண்டு, பிப்ரவரி மாதம் வரை, நாடு முழுவதும், குளிர்கால சீசன்.அதனால், முட்டையின் தேவை அதிகரித்து, விலையும் அதிகரிக்கும். முட்டை உற்பத்தியாளர்கள், பெரும்பாலும், குளிர்கால விற்பனையை அடிப்படையாக கொண்டே, பண்ணைகளில், கோழி வளர்ப்பில் ஈடுபடுவர்.வடகிழக்கு பருவமழை சீசன், குளிர்கால சீதோஷ்ண நிலை, ஜனவரி மாத ஆங்கில புத்தாண்டு, டிசம்பர் மாத கிறிஸ்துமஸ், உள்ளூர் பண்டிகை ஆகிய காரணங்களால் முட்டை தேவை அதிகரித்து, அதிகபட்ச விலையாக, 425 காசு வரை உயர்ந்தது. ஆனால், தற்போது, குளிர்கால மற்றும் பனி பெய்தல் குறைந்துள்ளதால், முட்டை நுகர்வு, படிப்படியாக குறைந்து வருகிறது.நாமக்கல் முட்டை மண்டல விலை நிர்ணயத்தில் மட்டும், 10 காசு அளவுக்கு திடீரென சரிந்து, 310 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. 13 நாட்களில், அதிகபட்சமாக, 70 காசுகளுக்கு மேல் குறைந்துள்ளது.‘வரும் நாட்களில், தேசிய அளவில் முட்டையின் தேவை குறையும் என்பதால், விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது’ என, பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|