பதிவு செய்த நாள்
29 ஏப்2014
17:08

மும்பை : தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் இந்த உயர்வு சிறிது நேரம் தான் நீடித்தது, முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்றதாலும், அந்நிய முதலீடுகள் அதிகளவு வெளியேறியதாலும், முக்கிய நிறுவன பங்குகளின் விலை குறிப்பாக வங்கி மற்றும் உலோகம் தொடர்பான பங்குகள் விலை சரிந்ததாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 165.42 புள்ளிகள் சரிந்து 22,466.19 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 46 புள்ளிகள் சரிந்து 6,715.25 புள்ளிகளிலும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில், 25 நிறுவன பங்குகள் விலை சரிந்து முடிந்தன. குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகளான எச்டிஎப்சி., ஐசிஐசிஐ., எஸ்பிஐ., போன்ற பங்குகளும், உலோக பங்குகளான டாடா ஸ்டீல், செயில், ஜிந்தால் ஸ்டீல் போன்ற பங்குகளும், எப்எம்சிஜி பங்கான இந்துஸ்தான் யுனிலீவர் பங்குகளும் பெரும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|