பதிவு செய்த நாள்
04 மே2014
00:42
புதுடில்லி:சென்ற 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் யூரியா இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், 30 சதவீதம் குறைந்து, 15,353 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, அளவின் அடிப்படையில், 12 சதவீதம் குறைந்து, 71 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.கையிருப்பு:முந்தைய, 2012–13ம் நிதிஆண்டில், 20,016 கோடி ரூபாய் மதிப்பிலான, 80 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டது.உள்நாட்டில் யூரியா கையிருப்பு உள்ளதால், அதன் இறக்குமதி குறைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், ஒரு டன் யூரியாவின் சராசரி இறக்குமதி விலை, 50 டாலர் குறைந்து, 340 டாலராக சரிவடைந்தது.
இது, முந்தைய நிதியாண்டில், 389 டாலராக அதிகரித்து காணப்பட்டது.இந்தியாவிற்கு ஆண்டுக்கு, 3 கோடி டன் யூரியா தேவைப்படுகிறது. ஆனால், 2.20 கோடி டன் யூரியா தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதத் தேவை, இறக்குமதி மூலம் ஈடு செய்யப்படுகிறது.பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் பொட்டாஷ், எம்.எம்.டி.சி., எஸ்.டி.சி., ஆகிய மூன்று நிறுவனங்கள், யூரியா இறக்குமதியை மேற்கொண்டு வருகின்றன.
இவை தவிர, மத்திய அரசு, இப்கோ மற்றும் கிரிப்கோவின் கூட்டு நிறுவனமான ஓமிப்கோ நிறுவனம் வாயிலாகவும், நிர்ணயிக்கப்பட்ட விலையில், யூரியாவை இறக்குமதி செய்கிறது.சென்ற நிதியாண்டில், இந்தியன் பொட்டாஷ், எஸ்.டி.சி., ஆகிய இரு நிறுவனங்களின் யூரியா இறக்குமதி முறையே, 25 லட்சம் மற்றும் 7.40 லட்சம் டன் என்ற அளவில் குறைந்து இருந்தது. இவை, இதற்கு முந்தைய 2012–13ம் நிதியாண்டில் முறையே, 36 லட்சம் மற்றும் 20 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது. அதே சமயம், இதே காலத்தில், எம்.எம்.டி.சி., நிறுவனத்தின் யூரியா இறக்குமதி, 5.40 லட்சத்தில் இருந்து, 16.80 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.
மானிய விலை:இதே காலத்தில், ஒமிப்கோ நிறுவனத்தின் யூரியா இறக்குமதியும், 18 லட்சத்தில் இருந்து, 21 லட்சம் டன்னாக உயர்ந்துஉள்ளது. மத்திய அரசு மானிய விலையில், விவசாயிகளுக்கு, ஒரு டன் யூரியாவை, 5,360 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.யூரியா உற்பத்தி செலவிற்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசத் தொகை, உர நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|