பதிவு செய்த நாள்
19 மே2014
00:23

புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 10.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,560 கோடி ரூபாயாக (126 கோடி டாலர்) அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்திய மருந்து பொருட்களுக்கான தேவை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, நடப்பாண்டில், மருந்து ஏற்றுமதி சூடுபிடிக்க வாய்ப்புள்ளது என, உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அமெரிக்கா உடனான அறிவுசார் சொத்துரிமை பிரச்னைகளால், சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், நாட்டின் மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 1.2 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 89 ஆயிரத்து 40 கோடி ரூபாயாக (1,484 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வளர்ச்சியாகும்.மத்திய அரசு, நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், 1.50 லட்சம் கோடி ரூபாய் (2,500 கோடி டாலர்) மதிப்பிற்கு, மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய, இலக்கு நிர்ணயித்துள்ளது.நாட்டின் மருந்து பொருட்கள் ஏற்றுமதியில், 25 சதவீத பங்களிப்புடன் அமெரிக்கா முதலிடத்திலும், அடுத்து இங்கிலாந்தும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|