பதிவு செய்த நாள்
19 மே2014
00:34

புதுடில்லி:நடப்பு, 2013–14ம் பயிர் பருவத்தில் (ஜூலை–ஜூன்), நாட்டின் உணவு தானிய உற்பத்தி, முந்தைய மதிப்பீட்டை விட, 10 லட்சம் டன் அதிகரித்து, சாதனை அளவாக, 26.44 கோடி டன்னை எட்டும் என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வெளியிடப்பட்ட நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கை விவரம் வருமாறு:கடந்த 2012–13ம் பயிர் பருவத்தில், உணவு தானிய உற்பத்தி, சாதனை அளவாக, 25.71 கோடி டன்னாக இருந்தது.
இது, நடப்பு பயிர் பருவத்தில், 26.44 கோடி டன்னாக உயரும்.கடந்த ஆண்டு பருவ மழை நன்கு இருந்ததால், பல உணவு தானியங்கள், உற்பத்தியில் புதிய சாதனை படைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல் உற்பத்தி, 10.63 கோடி டன்னாகவும், கோதுமை உற்பத்தி, 9.58 கோடி டன் என்ற அளவிலும் புதிய சாதனை படைக்கப்படும்.கடந்த பருவத்தில், நெல், கோதுமை ஆகியவற்றின் உற்பத்தி, முறையே, 10.53 கோடி டன் மற்றும் 9.35 கோடி டன் என்ற அளவில் இருந்தன.
மேலும், துவரம்பருப்பு (33.80 லட்சம் டன்), பயறு (99.30 லட்சம் டன்) சோளம் (2.42 கோடி டன்), பருப்பு வகைகள் (1.95 கோடி டன்), பருத்தி (3.65 கோடி பொதிகள்) மற்றும் சணல் (1.08 கோடி பொதிகள்) ஆகியவையும், உற்பத்தியில் சாதனை படைத்தன.இதற்கு முன், 2011–12ம் பயிர் பருவத்தில், உணவு தானியங்கள், நெல், கோதுமை ஆகியவற்றின் உற்பத்தி, சாதனை அளவாக, முறையே, 25.93 கோடி டன், 10.53 கோடி டன் மற்றும், 9.49 கோடி டன் என்ற அளவில் இருந்தன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|