மோசமான வானிலையால்கருப்பு தேயிலை உற்பத்தி சரிவுமோசமான வானிலையால்கருப்பு தேயிலை உற்பத்தி சரிவு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.58.59 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.58.59 ...
உலகளவில் வெள்ளிக்கு மவுசு கூடுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2014
00:47

சாமானிய மக்களுக்கு, தங்கம் விலை எட்டாக் கனியாக உள்ளதால், உலகளவில், வெள்ளி ஆபரணங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இத்துடன், தொழில்துறையில் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுவதாலும், அதன் தேவை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
நாணயம்:இதனை எடுத்துக்காட்டும் விதமாக, சென்ற 2013ம் ஆண்டில், சர்வதேச அளவில், வெள்ளிக்கான தேவை, 13.3 சதவீதம் அதிகரித்து, 30,635 டன்னாக உயர்ந்துள்ளது.இது, இதற்கு முந்தைய ஆண்டில், 27,047 டன்னாக இருந்தது என, நியூயார்க்கை சேர்ந்த ஆய்வு நிறுவனமான சில்வர் இன்ஸ்டியூட் தெரிவித்து உள்ளது.கடந்தாண்டு, வெள்ளி ஆபரணங்களுக்கான தேவை, 9.6 சதவீதம் அதிகரித்து, 5,142 டன்னிலிருந்து, 5,636 டன்னாக வளர்ச்சி கண்டது.
முதலீட்டு அடிப்படையிலும், மக்கள் அதிகளவில் வெள்ளியை விரும்பியதால், வெள்ளி நாணயங்கள் மற்றும் கட்டிகளுக்கான தேவை, அதிகபட்சமாக, 76.10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,949 டன்னிலிருந்து, 6,963 டன்னாக உயர்ந்துள்ளது.மேலும், வெள்ளி பொருட்களுக்கான தேவையும், 12.1 சதவீதம் அதிகரித்து, 1,264 டன்னிலிருந்து, 1,917 டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
மந்த நிலை:ஒரு சில நாடுகளில், தொழில் துறையின் மந்த நிலையால், தொழிற்சாலையில் பயன்படுத்தும் வெள்ளிக்கான தேவை, 0.4 சதவீதம் குறைந்து, 16,701 டன்னிலிருந்து, 16,630 டன்னாக சரிவடைந்துள்ளது.இருப்பினும், ஆசிய நாடுகளை பொறுத்தவரை, கடந்தாண்டு, தொழிற்சாலைகளில் வெள்ளிக்கான தேவை, 3 சதவீதம் அதிகரித்துள்ளது.குறிப்பாக, ஜப்பான் மற்றும் சீனாவின் மின் மற்றும் மின்னணு துறைகளில் வெள்ளி பயன்பாடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு, தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனால், 2013ம் ஆண்டில், இந்தியாவின் வெள்ளி இறக்குமதி முன் எப்போதும் இல்லாத வகையில், 180 சதவீதம் அதிகரித்து, 5,500 டன்னாக உயர்ந்தது.இதற்கு முன், 2008ம் ஆண்டில், 5,000 டன் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டதே சாதனை அளவாக இருந்தது.
வெள்ளி உற்பத்தி:சென்ற ஆண்டு, சர்வதேச அளவில் சுரங்கம் வாயிலான வெள்ளி உற்பத்தி, 3.5 சதவீதம் அதிகரித்து, 23,235 டன்னாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய 2012ம் ஆண்டில், 22,461 டன்னாக இருந்தது.அதேசமயம், கழிவு வெள்ளி உற்பத்தி, 24.1 சதவீதம் சரிவடைந்து, 7,161 டன்னிலிருந்து, 5,437 டன்னாக குறைந்துஉள்ளது.
மெக்சிகோ:ஒட்டு மொத்த அளவில், மதிப்பீட்டு ஆண்டில், வெள்ளி உற்பத்தி, 2.7 சதவீதம் குறைந்து, 28,500 டன்னிலிருந்து, 27,729 டன்னாக குறைந்துள்ளது என, சில்வர் இன்ஸ்டியூட் அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டு, சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் (28.3495 கிராம்) வெள்ளி விலை, சராசரியாக, 23.79 டாலர் என்ற அளவில் இருந்தது.உலகளவில் வெள்ளி உற்பத்தியில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது. பெரு, சீனா, ஆஸ்திரேலியா, ரஷ்ய ஆகிய நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)