பதிவு செய்த நாள்
29 மே2014
00:07
சென்னை ஆபரண தங்கத்தின் விலை, நேற்று சவரனுக்கு, 312 ரூபாய் குறைந்தது.சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக, உள்நாட்டில், சற்று உயர்ந்திருந்த தங்கத்தின் விலை, அதிரடியாக சரிவடைந்தது.
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,648 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,184 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 28,320 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 39 ரூபாய் குறைந்து, 2,609 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 312 ரூபாய் சரிவடைந்து, 20,872 ரூபாய்க்கு விற்றது. 10 கிராம் சுத்த தங்கம், 420 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 27,900 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 43.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 40,630 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|