பதிவு செய்த நாள்
09 ஜூன்2014
01:14

புதுடில்லி:சென்ற மே மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 7 சதவீதம் அதிகரித்து, 10.11 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, முந்தைய ஏப்ரல் மாதத்தில், 9.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.
இந்தியாவில், 45 பரஸ்பர நிதி நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. பங்குச் சந்தையின் எழுச்சியால், இந்நிறுவனங்கள் நிர்வகிக்கும் பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து மதிப்பு, தொடர்ந்து, மூன்று மாதங்களாக அதிகரித்து வருகிறது.சென்ற மே மாதத்தில் மட்டும், பரஸ்பர நிதி நிறுவனங்கள், 1.46 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளன.
சென்ற ஜனவரியில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 8.26 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே, 8.13 லட்சம் கோடி மற்றும் 8.25 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்கள் வாயிலாக திரட்டும் நிதியை பங்குகள், கடன்பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|