பதிவு செய்த நாள்
09 ஜூன்2014
01:17

மும்பை:இதுவரை இல்லாத அளவிற்கு, இந்திய பங்குச்சந்தை கண்டுள்ள எழுச்சியால், நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, 1.50 லட்சம் கோடி டாலரை தாண்டி உள்ளது. இதன் மூலம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து, இத்தகைய அளவில் பங்குகளின் சந்தை மதிப்பை கொண்டுள்ள ஐந்தாவது நாடு என்ற சிறப்பை, இந்தியா பெற்றுள்ளது.
முதன் முறையாககடந்த 2007ம் ஆண்டு, ஜூன் மாதம், இந்திய பங்குகளின் சந்தை மதிப்பு, முதன் முதலாக, ஒரு லட்சம் கோடி டாலரை தாண்டியது.ஆனால், அடுத்த ஆண்டே(2008), சர்வதேச பொருளாதார நெருக்கடியால், பங்குகளின் சந்தை மதிப்பு, வீழ்ச்சி கண்டது. பின், 2009ம் ஆண்டு, மே மாதம் மீண்டும், பங்குகளின் சந்தை மதிப்பு, ஒரு லட்சம் கோடி டாலரை தாண்டியது. அது முதல், 2012ம் ஆண்டில், சில மாதங்களை தவிர, அந்த அளவிற்கே பங்குகளின் சந்தை மதிப்பு இருந்து வந்தது.
ஆனால், கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மீண்டும், அந்த பெருமையை இந்திய பங்குச் சந்தை இழந்தது.சென்ற மே 16ம் தேதி, பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியானது முதல், பங்குச் சந்தை, அதிகவேக எழுச்சியை கண்டு வருகிறது.மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி கோலும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம்.மே மாத துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளில் இருந்தது.
இது, பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, கிடு கிடுவென உயர்ந்து, நடப்பு ஜூன் 6ம் தேதி, முதன் முறையாக, 25,396.46 புள்ளிகளில் நிலை கொண்டது.அன்று, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு, 89,31,898 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எச்சரிக்கை:அன்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 59.17ஆக இருந்தது. அதன் அடிப்படையில், பங்குகளின் சந்தை மதிப்பு, 1.50 லட்சம் கோடி டாலரை தாண்டியுள்ளது.இதனால், பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் மகிழ்ச்சி யில் திளைத்துள்ளனர். அதே சமயம், இனி மிகுந்த எச்சரிக்கையுடன், பங்குகளில் முதலீடு செய்யுமாறு, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|