பதிவு செய்த நாள்
06 ஜூலை2014
00:38
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 16 ரூபாய் குறைந்திருந்தது.சர்வதேச நிலவரங்களால், கடந்த வாரத்தில், உள்நாட்டில், தங்க ஆபரணங்கள் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 2,655 ரூபாய்க்கும்; 1 சவரன், 21,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 28,400 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை, கிராமுக்கு, மூன்று ரூபாய் உயர்ந்து, 2,658 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 24 ரூபாய் அதிகரித்து, 21,264 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 30 ரூபாய் உயர்ந்து, 28,430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி, 48.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 45,545 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த திங்களன்று (30ம் தேதி), ஒரு கிராம், 2,660 ரூபாய்க்கும், 1 சவரன், 21,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, இரண்டு ரூபாயும், சவரனுக்கு, 16 ரூபாயும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|