கூடு­த­லாக 1,500 மெகாவாட்மின் உற்­பத்தி: என்.எல்.சி.,கூடு­த­லாக 1,500 மெகாவாட்மின் உற்­பத்தி: என்.எல்.சி., ... தடியன்குடிசையில் கிடைக்குது சத்தான 'வாட்டர்' ஆப்பிள் தடியன்குடிசையில் கிடைக்குது சத்தான 'வாட்டர்' ஆப்பிள் ...
ரூ.2,838 கோடிக்கு தோல் பொருட்கள் ஏற்­று­மதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2014
00:40

புது­டில்லி:சென்ற ஏப்­ரலில், தோல் பொருட்கள் ஏற்­று­மதி, 42.60 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 2,838 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 1,990 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே காலத்தில், டாலர் அடிப்­ப­டை­யி­லான ஏற்­று­மதி, 28.47 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 36 கோடி டால­ரி­லி­ருந்து, 47 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது என, வர்த்­தக புல­னாய்வு மற்றும் புள்­ளி­யியல் தலைமை இயக்­கு­ன­ரகம் (டீ.ஜி.சி.ஐ.எஸ்.,) தெரி­வித்­துள்­ளது.குதிரை சேணம்கணக்­கீட்டு மாதத்தில், தோல் கால­ணிகள் ஏற்­று­மதி, 52.93 சத­வீதம் அதி­க­ரித்து, 598 கோடி ரூபா­யி­லி­ருந்து, 914 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டு உள்­ளது.
பயன்­பாட்­டிற்கு தயா­ரான தோல் பொருட்கள் ஏற்­று­மதி, 37.43 சத­வீதம் உயர்ந்து, 522 கோடி­யி­லி­ருந்து, 717 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கால­ணி­க­ளுக்­கான உதி­ரி­பா­கங்கள் ஏற்­று­ம­தியும், 40.16 சத­வீதம் உயர்ந்து, 123 கோடி­யி­லி­ருந்து, 173 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.வெளி­நா­டு­களில், இந்­திய தோல் ஆடை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ள­தை­ய­டுத்து, இதன் ஏற்­று­மதி, 29.63 சத­வீதம் உயர்ந்து, 132 கோடி­யி­லி­ருந்து, 172 கோடி ரூபா­யாக ஏற்றம் கண்­டுள்­ளது.மேற்­கண்­ட­வற்றை தவிர, தோல் பொருட்கள் ஏற்­று­மதி, 30.05 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 491 கோடி­யி­லி­ருந்து, 638 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
குதிரை சேணம் உள்­ளிட்ட விலங்­கு­க­ளுக்­கான தோல் பொருட்கள் ஏற்­று­மதி, 47.69 சத­வீதம் உயர்ந்து, 48 கோடி­யி­லி­ருந்து, 71 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.தோல் சாராத கால­ணி­களின் ஏற்­று­மதி இரு­ம­டங்­கிற்கும் அதி­க­மாக, அதா­வது, 102.63 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 74 கோடி­யி­லி­ருந்து, 150 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.மொத்த தோல் பொருட்கள் ஏற்­று­ம­தியில், கால­ணிகள் பிரிவு, 44 சத­வீத பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தில் உள்­ளது.
இதை­ய­டுத்து, விற்­ப­னைக்கு தயா­ரான தோல் (25 சத­வீதம்), தோல் பொருட்கள் (23 சத­வீதம்), தோல் ஆடைகள் (6 சத­வீதம்), விலங்­கு­க­ளுக்­கான தோல் பொருட்கள் (2 சத­வீதம்) ஆகி­யவை உள்­ளன.கணக்­கீட்டு மாதத்தில், மொத்த தோல் பொருட்கள் ஏற்­று­ம­தியில், ஜெர்­மனி, 11.73 சத­வீத பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தில் உள்­ளது.இங்­கி­லாந்து:இந்­நாட்­டிற்­கான, தோல் பொருட்கள் ஏற்­று­மதி, டாலர் அடிப்­ப­டையில், 44.19 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 3.82 கோடியில் இருந்து, 5.51 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது.
இதை­ய­டுத்து, இங்­கி­லாந்து (10.86 சத­வீதம்/5.10 கோடி டாலர்), அமெ­ரிக்கா (10.03 சத­வீதம்/4.71 கோடி டாலர்), இத்­தாலி (9.03 சத­வீதம்/4.24 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்­ளன.வரும் 2016–17ம் நிதி­யாண்டில், இந்­திய தோல் பொருட்கள் ஏற்­று­மதி, 84 ஆயிரம் கோடி ரூபாய் (1,400 கோடி டாலர்) என்ற அளவை எட்டும் என, தோல் பொருட்கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு கூட்­ட­மை­பபு மதிப்­பிட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 06,2014
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)