பதிவு செய்த நாள்
20 ஜூலை2014
00:39

புதுடில்லி:தேசிய பங்குச் சந்தை, அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு, 2,521 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கடன் பத்திரங்களை ஏலம் விட உள்ளது.இந்த ஏலம், நாளை பிற்பகல், 3:30க்கு துவங்கி, மாலை 5:30 மணியுடன் முடிவடைகிறது. கடந்த மாதம், 7,152 கோடி ரூபாய் மதிப்பிற்கு அரசு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.
இதில், முதலீடு செய்வதற்கு, அன்னிய முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதாவது, கடன்பத்திரங்கள் வேண்டி, 9,361 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஏல விண்ணப்பங்கள் வந்தன. அன்னிய முதலீட்டை கவரும் வகையில், இந்த ஏலம் நடத்தப்பட உள்ளது.ஜூலை 17ம் தேதி வரையிலான காலத்தில், அரசு கடன்பத்திரங்களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 97,025 கோடி ரூபாயாக உள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட மொத்த அனுமதி வரம்பில் (99,546 கோடி ரூபாய்), 97.47 சதவீதமாகும். நடப்பு ஆண்டில் இது வரையிலுமாக, அன்னிய முதலீட்டாளர்கள், கடன்பத்திர சந்தையில், நிகர அளவில், 73 ஆயிரம் கோடியையும், பங்கு களில், 68 ஆயிரம் கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|