பதிவு செய்த நாள்
20 ஜூலை2014
00:40

புதுடில்லி:நாடு தழுவிய அளவில் பருவமழை பொழிவு நன்கு இல்லாததால், கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு 2014–15ம் ஆண்டின் கரீப் பருவத்தில், உணவு தானிய உற்பத்தி சரிவடையும் என, மத்திய வேளாண் இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண் தெரிவித்தார்.கடந்த 2013–14ம் பயிர் பருவத்தில் (ஜூலை–ஜூன்), உணவு தானிய உற்பத்தி, சாதனை அளவாக, 26.44 கோடி டன்னை எட்டியது. இதில், கரீப் பருவத்தின் பங்களிப்பு, 12.93 கோடி டன்னாக உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு கரீப் பருவத்தில் உணவு தானிய உற்பத்தி குறைவாகவே இருக்கும்.ஜூலை 11ம் தேதி நிலவரப்படி, நெல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர தானியங்களின் சாகுபடி பரப்பு, 157.35 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 269.82 லட்சம் ஹெக்டேராக மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, பல்யாண் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|