பதிவு செய்த நாள்
17 ஆக2014
04:00

புதுடில்லி: நாட்டின் மொத்த தயாரிப்பு துறை உற்பத்தியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ.,) பங்களிப்பு, ஆண்டுக்காண்டு சரிவடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டின் ஒட்டு மொத்த தயாரிப்பு துறை உற்பத்தியில், கடந்த 2007 – 08ம் நிதியாண்டில், எம்.எஸ்.எம்.இ.,ன் பங்களிப்பு, 41.98 சதவீதமாக இருந்தது.துணிகர முதலீடு:இது, 2008 – 09, 2009 – 10 மற்றும் 2010 – 11ம் நிதியாண்டுகளில் முறையே, 40.79 சதவீதம், 39.63 சதவீதம் மற்றும் 38.48 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, 2011 – 12ம் நிதியாண்டில், 37.52 சதவீதமாக மேலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதையடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு, ஆண்டுக்காண்டு சரிவடைந்து வருகிறது.குறிப்பாக, 2007 – 08ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், எம்.எஸ்.எம்.இ.,ன் பங்களிப்பு, 7.81 சதவீதமாக இருந்தது. இது, 2008 – 09, 2009 – 10 மற்றும் 2010 – 11ம் நிதியாண்டுகளில் முறையே, 7.52 சதவீதம், 7.49 சதவீதம், 7.42 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.இது, கடந்த 2011 – 12ம் நிதியாண்டில், 7.28 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு, எம்.எஸ்.எம்.இ., துறையை ஊக்குவிக்கும் வகையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பாக, இத்துறையில் அதிகளவில் முதலீட்டை ஈர்க்கும் வகையில், மத்திய பட்ஜெட்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், துணிகர முதலீட்டு நிதியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சலுகை திட்டம்:இதுதவிர, சிறு தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த பல்வேறு சிறப்பு சலுகை திட்ட அறிவிப்புகளும், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையை ஊக்குவிக்கும் வகையில், 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, 11வது ஐந்தாண்டு திட்ட கால ஒதுக்கீட்டு தொகையுடன் ஒப்பிடுகையில், 133.53 சதவீதம் அதிகமாகும்.
தொழில் முனைவோர், வங்கி கடன் பெறுவதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மத்திய அரசு, இதனை கருத்தில் கொண்டு, தொழில்முனைவோர் வங்கி கடன் பெறுவதில் உள்ள நடைமுறைகளை எளிதாக்கவும், அவர்களுக்கு உரிய நேரத்தில் கடன் கிடைக்கவும், தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என, எம்.எஸ்.எம்.இ., துறைக்கான மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா பார்லிமென்டில் தெரிவித்தார். எம்.எஸ்.எம்.இ., பிரிவில், நாடுதழுவிய அளவில், 3.61 கோடி நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 6.90 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|