பதிவு செய்த நாள்
27 ஆக2014
07:15
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), வீட்டு வசதி கடனுக்கான வட்டியை, 0.05 சதவீதம் முதல் 0.15 சதவீதம் வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.இதன்படி, 75 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வீட்டு வசதி கடனுக்கான வட்டியை, 10.15 சதவீதத்திலிருந்து, 10.10 சதவீதமாக குறைத்துள்ளது.மேலும், 75 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட வீட்டு வசதி கடனுக்கான வட்டியை, 0.15 சதவீதம் குறைத்து, 10.30 சதவீதத்திலிருந்து, 10.15 சதவீதமாக குறைத்துள்ளது. இப்புதிய வட்டி விகிதம், ஆகஸ்ட் 26ம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இவ்வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை தொடர்ந்து, மேலும் பல வங்கிகள் வீட்டு வசதி கடனுக்கான வட்டியை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|