பதிவு செய்த நாள்
02 செப்2014
00:26
புதுடில்லி, :நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.7 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது. இதற்கு, தங்கம் இறக்குமதி வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளதே, முக்கிய காரணம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 780 கோடி டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.7 சதவீதம்) சரிவடைந்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 2,180 கோடி டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதம்) மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
கணக்கீட்டு காலாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 10.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,170 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மேலும், இறக்குமதி, 11,640 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. குறிப்பாக, தங்கம் இறக்குமதி, 57.2 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,650 கோடி டாலரிலிருந்து, 700 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக உள்ளதால், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 3,470 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. இது, கடந்த நிதியாண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் (5,050 கோடி டாலர்), 31.4 சதவீதம் குறைவாகும் என, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|