பதிவு செய்த நாள்
02 செப்2014
00:36
புதுடில்லி: நடப்பாண்டு ஜூலையில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 2.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 5.3 சதவீதமாக இருந்தது என, மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம் மற்றும் உருக்கு ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே, 1 சதவீதம், 9 சதவீதம், 5.5 சதவீதம், 4.2 சதவீதம் மற்றும் 3.4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளன.இருப்பினும், நிலக்கரி, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே, 6.2 சதவீதம், 16.5 சதவீதம் மற்றும் 11.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 4.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|