பதிவு செய்த நாள்
01 நவ2014
04:01

புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், ஏப்., முதல் செப்., வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 4.38 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.இது, முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில், 82.6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.அரசின் செலவினம்கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், நிதி பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில், 76 சதவீதமாக இருந்தது.கணக்கீட்டு காலத்தில், நிகர வரி வசூல், 3.23 லட்சம் கோடி ரூபாய் (முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் இலக்கில் 33.1சதவீதம்) என்ற அளவில் உள்ளது. அதேசமயம், மத்திய அரசின் மொத்த செலவினம், மதிப்பீட்டு காலத்தில், 8.62 லட்சம் கோடி ரூபாயாக (பட்ஜெட் இலக்கில் 48 சதவீதம்) உள்ளது.
இதில், திட்டமிட்ட செலவினம், 2.46 லட்சம் கோடியாகவும், திட்டமிடப்படா செலவினம், 6.16 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளன.கணக்கீட்டு ஆறு மாத காலத்தில், வருவாய் வசூல், 4.17 லட்சம் கோடி ரூபாய் (பட்ஜெட் மதிப்பீட்டில் 35.1 சதவீதம்) என்ற அளவில் உள்ளது.கடந்த 2012 – 13ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை, 4.9 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.இது, கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், 4.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
நடப்பு முழு நிதியாண்டில், இதை, 4.1 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.நாட்டின் வரி வசூல் குறைந்துள்ள நிலையில், நிதி பற்றாக்குறை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல சிக்கன நடவடிக்கைகளை, நேற்று முன்தினம் அறிவித்தது.இதில், திட்டமிடப்படா செலவினத்தை, 10 சதவீதம் குறைப்பது உள்ளிட்ட, மத்திய அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு சிக்கன வழிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டன.நிலுவை வரிவரும் 2016 – 17ல், நிதி பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீதம் என்ற அளவில் குறைப்பதை, மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது.அதிகளவில் வரி திரும்ப கொடுக்கப்பட்டதன் காரணமாகவே, நிதி பற்றாக்குறை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில், நிலுவையில், 1.20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரி திருப்பி கொடுக்க வேண்டியுள்ளது என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|