பதிவு செய்த நாள்
01 நவ2014
04:04

புதுடில்லி :முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த எட்டு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.கடந்தாண்டு இதே மாதத்தில், முக்கிய எட்டு துறைகள் உற்பத்தி வளர்ச்சி, 9 சதவீதமாக இருந்தது என, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே, 1.1 சதவீதம், 6.2 சதவீதம், 2.5 சதவீதம் மற்றும் 11.6 சதவீதம் என்ற அளவில் குறைந்துஉள்ளன.மேற்கண்டவை தவிர, நிலக்கரி, சிமென்ட், உருக்கு மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தியும் முறையே, 7.2 சதவீதம், 3.2 சதவீதம், 4 சதவீதம் மற்றும் 3.8 சதவீதம் என்ற அளவில் சரிவை கண்டுள்ளன. இவை, கடந்தாண்டின் இதே மாதத்தில் முறையே, 13.6 சதவீதம், 12.1 சதவீதம், 10.7 சதவீதம் மற்றும் 12.9 சதவீதம் என்ற அளவில் இருந்தன.
நடப்பாண்டு ஜனவரியில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி, ஒட்டு மொத்த அளவில், 1.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.நடப்பு நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், எட்டு துறைகளின் உற்பத்தி, 4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு உள்ளது.
இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், 5 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், மேற்கண்ட முக்கிய எட்டு துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதம் என்ற அளவில் உள்ளது. செப்டம்பர் மாதத்தில், மேற்கண்ட துறைகளின் உற்பத்தி சுணக்கம் கண்டுள்ளது என்பது, ஒட்டு மொத்த தொழில்துறை உற்பத்தியில் பாதிப்பை உண்டாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|