பதிவு செய்த நாள்
03 நவ2014
00:03

புதுடில்லி:கிராமப்புற மேம்பாட்டிற்கு கடனுதவி வழங்கி வரும், நபார்டு வங்கி, உணவு பதப்படுத்தல் துறை நிறுவனங்களுக்கு, 9.5 சதவீத வட்டியில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது என, உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உணவு பதப்படுத்தல் துறையை மேம்படுத்தும் வகையில், நபார்டு என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய வேளாண் மற்றும ஊரக மேம்பாட்டு வங்கிக்கு, 2,000 கோடி ரூபாயை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, உணவு பதப்படுத்தல் துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், நபார்டு அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
இதில், உணவு பதப்படுத்தல் துறை மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட 2,000 கோடி ரூபாயை, நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவாதித்தனர். மேலும், உணவு பதப்படுத்தல் துறை நிறுவனங்களுக்கு, ஆண்டு 9.5 சதவீத வட்டியில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|